Sunday, 12 February 2017

🎓ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்க்கை தொடர் : D


🍭🍮🍭🍮🍭🍮🍭🍮🍭🍮🍭

💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

🎓ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்க்கை தொடர் : D

🎯 ஸாலிஹ் நபியை அவரது சமுதாயம் பொய்யரெனத் தூற்றியது
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.

📕 அல்குர்ஆன்:54:23

"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.

📙அல்குர்ஆன்: 54:24

"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).

📒 அல்குர்ஆன்:54:25

இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக அல்லாஹ் பின்வருமாறு பதிலளித்தான்.

"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.

📙 அல்குர்ஆன்:54:26

அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!

📓 அல்குர்ஆன்:54:27

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது

📘 அல்குர்ஆன்:26:141

"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

📙 அல்குர்ஆன்:26:142

"ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.

📗 அல்குர்ஆன்:26:143

"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

📒 அல்குர்ஆன்:26:144

"இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?

📘அல்குர்ஆன்: 26:145

🐪 அத்தாட்சியாக அனுப்பப்பட்ட ஒட்டகம்

🔋ஸாலிஹ் (அலை) அவர்களைப் பொய்யரெனக் கருதியதோடு அவரைச் சூனியக்காரர் என்றும் வர்ணித்தார்கள். மேலும் ஸாலிஹ் நபி இறைதூதர் தாம் என்பதை நிரூபிக்க ஓர் அடையாளத்தைக் கொண்டு வருமாறு வேண்டினர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க அல்லாஹ் அற்புதமான ஓர் ஒட்டகத்தைச் சான்றாக அனுப்பினான்.

"நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்" (என்றனர்).

📓அல்குர்ஆன்: 26:153

அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."

📔 அல்குர்ஆன்: 26:154 

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

ஆக்கம்:👇
📝 உலமாக்கள் குழுமம்🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 13 / 2 / 17

🎾⛱🎾⛱🎾⛱🎾⛱🎾⛱🎾

No comments:

Post a Comment