Sunday, 12 February 2017

🍲🍥 *உணவில் பரக்கத்தை பெறும் வழிகள்*🍥🍲


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ

🍲🍥 *உணவில்  பரக்கத்தை  பெறும்  வழிகள்*🍥🍲

🅾🅾🅾🅾🅾🅾🅾🅾🅾🅾

💮நமது  உணவை  பரக்கத்  நிறைந்ததாக  ஆக்கிக் கொள்வதற்கு  கடைபிடிக்க  வேண்டிய  ஒழங்குகளை  நபி  (ஸல்)  அவர்கள்  கற்றுத்  தந்துள்ளார்கள். நம்பிக்கையோடு  அவற்றை  கடைபிடித்தால்  நமது  உணவும்.   இறையருள்   நிறைந்ததாக   மாறிப்  போகும்.

🌱1.  *அளந்து  சமைக்க  வேண்டும்* :
உங்கள்  உணவை (தேவைக் கேற்ப)  அளந்து  கொள்ளுங்கள்.  உங்களுக்கு  பரக்கத்  செய்யப்படும்.

📢 அறிவிப்பாளர் மிக்தாம்  (ரழி)
📚நூல் : புகாரீ 2128
         அஹ்மது  16548

🌱2.  *நடுவில்  உள்ளதை  சாப்பிடக்  கூடாது*:

உணவின்  நடுப்பகுதியில்  பரக்கத்  இறங்குகிறது.  எனவே
அதன்  ஓரத்திலிருந்து  சாப்பிடுங்கள்.  நடுவிலிருந்து  சாப்பிடாதீர்கள்

📢 அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரழி)

📚 நூல் :  திர்மிதி: 1727,  அபூதாவூது : 3280 ,  இப்னு மாஜா : 3268 , 3045 , 3261 , 17018.

🌱3.  *பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்*:

நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள்  நமது  தோழர்கள்  ஆறு  பேருடன்  சாப்பிட்டுக்  கொண்டிருந்தார்கள் .  அங்கே  வந்த  கிராமவாசி ஒருவர்  அதிலிருந்து  இரண்டு  கவள  உணவை சாப்பிட்டார்.

இவர்  பிஸ்மில்லாஹ்  கூறியிருந்தால்  ஒரு  கவளமே  இவருக்குப்  போதுமானதாக  இருந்திருக்கும் என நபியவரகள்  இவருக்குப்  போதுமானதாக  இருந்திருக்கும்  என  நபியவர்கள்  கூறினார்கள்.

📢 அறிவிப்பாளர் ஆயிஷா (ரழி)

📚 நூல் : திர்மிதி : 1781 ,  இப்னு மாஜா :  3255 ,  அஹ்மது :  23954 , 24895 , 25089.

🌱 4.  *மீதமின்றிச்  சாப்பிட  வேண்டும்* :

விரல்களை  சூப்பியும்.  தட்டையை  வழித்தும்  சாப்பிடுங்கள்.  ஏனெனில்  அதில்  பரக்கத்  இருக்கிறது  என்பதை  நீங்கள்  அறிய  மாட்டீர்கள்  என  நபி  (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்.

📢 அறிவிப்பாளர்: ஜாபிர்  (ரழி)
📚  நூல் :  முஸ்லிம் : 3792 , 3793 , 3794 , இப்னு மாஜா : 3261 ,  அஹ்மது : 13705 , 14025 , 14101 , 14410 , 14689

🌱 5.  *பகிர்ந்து  உண்ண  வேண்டும்* :

ஒருவர்  உணவு  இருவருக்குப்  போதுமானதாகும். இருவர்  உணவு  நால்வருக்குப்  போதுமானதாகும்.  நாலுவரின்  உணவு  எட்டு  பேருக்குப்  போதுமானதாகும்  என  நபி  (ஸல்)  அவர்கள்  கூறினார்கள் .

📢 அறிவிப்பாளர்: ஜாபிர்  (ரழி)
📚  நூல் :  முஸ்லிம் : 3836 , 3837 , இப்னு மாஜா : 3245 , அஹ்மது :  13706 , 13870 , 14572.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *13-02-2017*


No comments:

Post a Comment