Sunday, 12 February 2017

🎓ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் : C


🌅🏡🌅🏡🌅🏡🌅🏡🌅🏡🌅

💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

 🎓ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் : C

🔮 ஸாலிஹ் (அலை) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பதற்கு முன்னால் அந்த மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்கு உடையவராகவே வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர்கள் தங்கள் பிரச்சாரப் பணியை மேற்கொள்ள வேண்டிய நபித்துவத்தை அல்லாஹ் வழங்கினான். அந்தச் சமயத்தில் சுகபோக வாழ்கையில் மூழ்கி இருந்த அவரது சமூதாய மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த ஒரு சில பலவீனமான ஏழைகள் மாத்திரமே அவரை முதலில் ஏற்றுக்கொண்டனர்.

⏳அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.

📘அல்குர்ஆன்: 7:75

🍃 அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.

📗அல்குர்ஆன்: 7:76

🔵 சுகபோக வாழ்கையில் மதி மயங்கி சைத்தானின் உற்ற நண்பர்களாக மாறி வாழும் தமது சமுதாய மக்களை நினைத்து, ஸாலிஹ் நபியவர்கள் மிகுந்த வேதனை கொள்ளலானார்கள். அல்லாஹுவை மறந்து சிலைகளை வணங்குவதிலேயே மூழ்கித்திளைத்த அந்த மக்களை நேர் வழிப்படுத்த பலவாறு முயன்றார்கள். பல உபதேசங்களை அவர்கள் முன் எடுத்துரைத்தார்கள். ஸாலிஹ் நபியை இறைத்தூதராக ஏற்க மறுத்து அந்த மக்கள் உம்மைப் போன்ற ஒரு மனிதரைத் தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்றும் ஸாலிஹ் நபியை பெரும் பொய்யர் என்றும் கூறினர்.

 🍬இன்னும், ஸமுது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."

📙அல்குர்ஆன்:11:61

🌝 அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

📒 அல்குர்ஆன்:11:62
     

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

ஆக்கம்:👇
📝 உலமாக்கள் குழுமம்🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 12 / 2 / 17

❇♦❇♦❇♦❇♦❇♦❇

No comments:

Post a Comment