Sunday, 12 February 2017

🎓ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் : B


🍓🍎🍓🍎🍓🍎🍎🍓🍎🍓🍎

💎 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 💎

🌙நபிமார்கள் வரலாறு🌟

🎓ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் : B

☘ நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற பொழுது, 'அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்து விடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையதீர்கள்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள்.

📚புகாரி 3380

மேற்கண்ட நபிமொழிகளின் மூலம் அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ர் என்ற பகுதி மக்காவிலிருந்து தபூக்கிற்குச் செல்லும் வழியில் இன்றளவும் உள்ளது என்பதையும் உலகம் அழியும் காலம் வரை வாழும் மக்களுக்குப் படிப்பினையாக அந்த இடம் இருக்கும் என்பதை அறியமுடிகிறது.

🖌தற்போதைய வரலாற்றுக் குறிப்பின்படி 'அல் ஹிஜ்ர்' என்பது வட சவூதியில் 'தைமா' வுக்கு தென் மேற்கே உள்ள ஓரிடத்தின் பெயராகும். இப்போது அதை 'மதாயின் ஸாலிஹ்' என அழைகின்றனர். நபி (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது அந்த இடத்தில தான் தங்கினார்கள் என்று ஆதாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து பின்வரும் குறிப்பை தப்ஸீர் மாஜிதீயிலுருந்து அறிஞர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

⏳ஸமூது என்பது வடமேற்கு அரேபியாவில் வாழ்ந்த ஒரு பழம் பெரும் சமூகத்தாரின் பெயராகும். ஹிஜ்ர் எனும் ஊர் அவர்களின் தலைநகராக விளங்கியது. அது இன்று மதாயினு ஸாலிஹ் என அழைக்கப்படுகிறது. ஆது சமூகத்தாருக்குப்பின் வாழ்ந்த இந்த கூட்டத்தார். கட்டடக் கலையில் சிறந்து விளங்கினர். கல் மாளிகைகள், மலைக்குகைக்குள் அமைத்து அவர்கள் வசித்து வந்தனர். ஸமூது கூட்டத்தாரை நல்வழிபடுத்த அவர்களில் ஒருவரான ஸாலிஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். விவிலியம் பழைய ஏற்பாட்டில் ஸாலிஹ் (அலை) அவர்களயே சாலா என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள்.சினாய் தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஸாலிஹ் (அலை) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது.
     
🔋ஸாலிஹ் நபியின் சமுதாயமான ஸமூது சமுதாயத்தினர் மிக மிக சுகபோகமாக வாழ்ந்தார்கள் என்று திருமறை குறிபிடுகிறது.

"தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-

📗 அல்குர்ஆன் :26:146

"வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,

⛵அல்குர்ஆன் :26:147

🔵 "மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்காளா?)

📕அல்குர்ஆன் : 26:148

🍃 இன்னும் நினைவு கூறுங்கள்; 'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்" (என்றும கூறினார்).

📒அல்குர்ஆன் :7:74

🍬 சுக போகங்களில் மூழ்கித் திளைத்திருந்த இந்த சமூதாயதிற்குத் தூதராக தேர்தெடுக்கப்பட்ட ஸாலிஹ் நபியும் அந்தச் சமூதாயத்தில் அந்தஸ்து மிகுந்தவர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். இதனை அவர்களது சமூதாய மக்களே நாவுகளால் ஒப்புகொள்கின்றனர்.

"ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்;

📙 அல்குர்ஆன் :11:62

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

ஆக்கம்:👇
📝 உலமாக்கள் குழுமம்🎖

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 12/ 2 / 17

☂☂☂☂☂☂☂☂☂☂☂

No comments:

Post a Comment