*இதை அதிகமாக பரப்புங்கள் . மக்களுக்கு ...குடும்பத்தினருக்கு... படித்துக் காட்டுங்கள் ... ஒருவர் திரும்பினாலும் உங்களுக்கு கூலி உண்டு ..அதிகாலையில் ஆண்கள் எழும்புவது கடினமாக உள்ளதா?*
*அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான்.*
*எனவே தான் அதிகாலைத் தொழுகையை* *நிறைவேற்றுபவர்களை இஸ்லாம்* *வாழ்த்துகின்றது.*
*வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள். மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பெயர் சூட்டுகின்றது.*
*நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!”*
(அபூதாவூத்)
*அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் இருக்கின்றது.*
*ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:*
*“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.”* (பைஹகீ)
*ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.*
*அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:*
*“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.”*
(அஹ்மத்)
*நபிகளாரின் வேதனை:*
*உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்:* *ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?”*
*என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:*
*“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.”*
(புகாரி,முஸ்லிம்)
*ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன.*
*இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவே எண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).*
*அண்ணலாரின் அமுத மொழிகள்*:
*மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:*
*“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்”*
(பைஹகீ)
*“சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு நாளும் நுழைய மாட்டார்”* (முஸ்லிம்)
*யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.”* (தபரானி)
*அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்: யார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின் பட்டியலிலும்,அல்லாஹ்வின் தூதுக்குழுவினரின் பட்டியலிலும் எழுதப்படுகின்றார்.”*
*ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள்.* *அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள்.*
*பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கிறான்.*
*“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.”*
(திர்மிதி)
*அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்”*
*யூதப் பெண் அமைச்சரின் பதில் :*
*நான் அரபுலகில் வசித்தபோது யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப்பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?”*
*இதுதான் கேள்வி.*
*அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம்.*
*ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”. அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் :*
*“ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்று என்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.”*
*அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.*
*‘யூதர்களால் நாங்கள் நசுக்கப்படுகின்றோம்; எங்களைக் காப்பாற்று’ என்று நாம் இறைவனிடம் இருகை ஏந்துகின்றோமே.. இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம்காட்டுவதில்லை..? அவனது கட்டளையை நாம் நிராகரித்தோம்; அவன் நமதுவிண்ணப்பங்களை நிராகரிக்கின்றான்*
*அவ்வளவுதான். காலை 7 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் போக்கு வரத்து நெரிசலைச் சற்றுகவனித்துப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள். புற்றீசல்கள் போன்று எங்கிருந்து இவ்வளவு மக்களும் ஒரு சேரப் புறப்பட்டு வந்தனர் என்று தோன்றும். அதில் முஸ்லிம்களும் கணிசமாக இருப்பர்.*
*ஆச்சரியம் சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இம்முஸ்லிம்கள் எல்லாம் எங்கிருந்தனர்..? உயிருடனா அல்லதுஉயிரற்றவர்களாகவா..? உயிருடன்தான் இருந்தனர் என்றால் ஸுபுஹ் தொழுகைக்குப்பள்ளிவாசலுக்கு ஏன் வரவில்லை? யாரிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைக்குமோ தெரியவில்லை.*
*அதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக்கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை;*
*பாலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம்.முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம். எப்படிக் கிடைக்கும்?*
*அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?*
*மாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.*
*ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான்:*
*“இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில்,அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.”* (46:25)*
*ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான்*
*திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.*
*அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்”*
(7:91)
*(இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)*
*லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே அல்லாஹ் கூறுகின்றான்:*
*“எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனை திண்ணமாக அவர்ளையும் பீடிக்கப்போகிறது.இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும்.* *அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?”* (11: 81)
*ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் :*
*இறுதியில் ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது.அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்.* (29:37)
*இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.*
*ஆகவேதான் மக்கத்து சமூகமும் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் செய்தியை ஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை இவ்வாறு இருந்தது:*
*“என்ன,இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா?*
*அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின்,*
*எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்* (37:176,177)
*(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது).
பதிவு நாள்:15-02-2017.

No comments:
Post a Comment