💧☂💧☂💧☂💧☂💧☂💧
🎾 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🎾
🌙 நபிமார்கள் வரலாறு 🌟
ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : எ
⚫ ஹுத் அலை அவர்களின் மறைவு;
💎 ஆது சமுதாயத்தார் அழிந்த பிறகு, ஈமான் கொண்ட மக்களை அழைத்துக் கொண்டு, எமன் தேசத்திலுள்ள ஹளர மவ்த் என்ற ஊருக்கு ஹூத் நபி சென்றடைந்தார்கள். இங்கு ஐம்பது ஆண்டுகள் வரை இறைப்பணி செய்துவிட்டு, தமது 464 வது வயதில் காலமானார்கள்.
ஹுத் நபியின் மண்ணறை எங்குள்ளது❓
🗽 யமன் தேசத்திலுள்ள ஹள்ரமவ்த் என்ற பகுதியிலிருந்து அலி ரலி அவர்களைச் சந்திக்க ஒரு மனிதர் வந்தார். அவர்களிடம் அலி ரலி அவர்கள் உங்கள் ஊரில் சிவப்பு நிற மண்மேடு மற்றும் மணல்குன்று, இலந்தை மரம், சுராக் மரம் ஆகியன இருக்குமே; அதன் அருகில் உத்தமன் என்ற பெயருடைய ஓடை ஒன்று ஓடுமே; அதனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?என்று கேட்டார்கள். அந்த மனிதர், ஆம் நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்தது மாதிரியே கேட்கிறீர்களே? என்று கேட்டார். அதற்கு அலி அவர்கள் அங்கு தானே ஹுத் அலை அவர்களின் மண்ணறை உள்ளது, என்றார்கள். உடனே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்றதும், அலி ரலி அவர்கள் இல்லை இவ்வாறு நான் கேள்விப்பட்டேன் என்றார்கள். இந்தக் குறிப்பு இப்னு ஜரீரில் இடம்பெற்றுள்ளது.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
_ஆக்கம்👇_
📝 *உலமாக்கள் குழு*🏅
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 06 / 2 / 17
🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭
No comments:
Post a Comment