Monday, 6 February 2017

*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 10 🌍🌍*


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 10 🌍🌍*

*🎯சிறிய அடையாளங்கள்*


*19.இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி, கடைசி ரஸுல் என்பதை நாம் அறிவோம். இதற்கு ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் சான்றுகளாகவுள்ளன.

🔘ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் பல்வேறு காலகட்டங்களில் தம்மையும் இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்ட பொய்யர் சிலர் தோன்றினார்கள்.


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.*
*நூல்: புகாரி 3609, 7121*


🔘நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் யமாமா'வில் *முஸைலமா* என்பவன், யமன் நாட்டில் *அல் அஸ்வத்* என்பவன்.

🔘ஆபூபக்ர் (ரலி) ஆட்சியில் *தலீஹா* என்பவன் *ஸஜாஹ்* என்ற பெண், பின்னர் *முக்தார்* என்பவன், அதன் பின்னர் *அல்ஹாரிஸ்* என்பவன், நமது காலத்தில் *மிர்ஸா குலாம் அஹ்மது* என்பவன் என்று தோன்றியுள்ளனர். இவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று பொய்யாக அறிவித்துக் கொண்டனர்.


*20.முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யத் தக்கவை, செய்யக் தகாதவை அனைத்தையும் நமக்குக் கற்றுத் தந்து விட்டுச் சென்றுள்ள னர். அவர்கள் மார்க்கத்தில் எள் முனையளவும் குறை வைக்கவில்லை.

🔘ஆனாலும் முஸ்லிம்கள் அவர்கள் காட்டிய வழியில் செல்லாமல் மற்றவர்களிடமிருந்து மார்க்கத்தைக் காப்பியடிப்பதைக் காண்கிறோம்.


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.*
*நூல்: புகாரி 3456, 7319*


🔘மற்றவர்கள் திதி, திவசம் செய்வது போல் *முஸ்லிம்கள் மூன்றாம் பாத்திஹா நாற்பதாம் பாத்திஹா* என்று ஏற்படுத்திக் கொண்டார்கள்.

🔘மற்றவர்கள் தேர், சப்பரம் இழுப்பதைப் பார்த்து இவர்கள் *சந்தனக் கூடு* இழுக்கின்றனர்.

🔘அவர்கள் கொடி மரம் ஏற்றினால் இவர்களும் ஏற்றுகின்றனர். அவர்கள் பிரசாதம் கொடுத்தால் இவர்கள் *தபர்ருக், சீரனி, நார்சா* என்று கொடுக்கின்றனர்.

🔘அவர்கள் பஜனை பாடுவதற்குப் போட்டியாக இவர்கள் *மவ்லிதை* ஏற்படுத்திக் கொண்டார்கள்.

🔘அவர்கள் கற்பனைக் காவியம் உருவாக்கிக் கொண்டது போல் இவர்கள் *சீராப்புராணம்* போன்ற கட்டுக் கதைகளை உருவாக்கிக் கொண்டனர்.

*🔘பேய், பிசாசு, மாயம், மந்திரம்* என்று அனைத்திலும் காப்பி அடித்து விட்டனர். இவையும் யுக முடிவு நாள் நெருங்கி விட்டதற்கான அடையாளமாகும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 06 -02-2017.

தொடர் 

No comments:

Post a Comment