Monday, 6 February 2017

*📖 திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு தொடர் - 5*


*📖 திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு*

*பாகம் 5*

*✅நபிக்கு முதல் வஹீ(இறைச்செய்தி)  இறங்குதல்*

🔘தமது சமூகத்தின் இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.

🔘எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள *'ஹிரா'* எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

🔘பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

🔘இவ்வாறு குகையில் இருந்தபோது வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் கண்டார்கள். அவர் ஜிப்ரீல் எனும் வானவர் ஆவார்.

🔘அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து 'ஓது' எனக் கூறியபோது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🔘மீண்டும் அவர் 'ஓது' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறுகக் கட்டியணைத்து "படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக'' என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார்.

*(இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது)*

🔘இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

🔘"இறைவன் உங்களைக் கைவிடமாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிடமாட்டான்'' என்று அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல்படுத்தினார்கள்.

🔘ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்ட கதீஜா அவர்கள் தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

*🔘"நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்; உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்;* *ஏனெனில் இறைத்தூதர்கள் பிரச்சாரம் செய்யும்போது* *இது தான் நடந்துள்ளது" என்று அவர் கூறி நம்பிக்கையூட்டினார்.*
*(நூல்: புகாரி 2)*

🔘இப்படி ஆரம்பித்த இறைச்செய்தியின் வருகை சிறிது சிறிதாகச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

🔘23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

*திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு நிறைவடைந்தது⏹*

பதிவு நாள்:06-02-2017.



No comments:

Post a Comment