Monday, 6 February 2017

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : ஊ


💧☂💧☂💧☂💧☂💧☂💧

🎾 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🎾

🌙 நபிமார்கள் வரலாறு 🌟

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : ஊ

✨ அல்லாஹ் ஆது சமுதாயத்தை அழித்த அந்தக் காற்றைப்பற்றி குறிப்பிடும் பொழுது, "மலட்டுக் காற்று" என்று குறிப்பிடுகிறான்.

🌿ஆது சமுதாயத்திடமே (படிப்பினை) உள்ளது. அவர்களின் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம்.

அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.

📗அல்குர்ஆன் 51-41,42

🌳 மலட்டுக் காற்று என்பது மேற்கிலிருந்து வீசும் நச்சுக் காற்றைக் குறிக்கும். இக்காற்று இறைமறுப்பாளர்களின் மூக்குத் துவாரங்களில் புகுந்து பின்பக்கமாக வெளியேறியது. அதனால் அவர்களின் உடல் உறுப்புகள்   ஒவ்வொன்றாக துண்டிக்கப்பட்டன.

 (தஃப்ஸீருல் பய்லாவீ)

ஆது கூட்டத்தாரிடம் உங்களுக்கு படிப்பினை உள்ளது;

⌛ ஆயிஷா ரலி அவர்கள் கூறியதாவது: நபி ஸல் அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; தம் அறைக்கு உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; நிம்மதியற்று ஒருவித தவிப்புடன் காணப்படுவார்கள். அவர்களின முகம் மாறிவிடும். வானம் மழை பொழிந்துவிட்டால் அந்த தவிப்பான நிலை அவர்களை விட்டும் மாறிவிடும். எனவே, ஒருமுறை நான் அவர்களுக்கு அந்த தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி ஸல் அவர்கள், திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஆது சமூகத்தார், அந்த வேதனைக் கொணரும் மேகம் தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது தவறாக புரிந்து கொண்டு இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்.

📖 திருக்குர்ஆன் 46:24

 என்று கூறினார்களே அத்தகைய வேதனைக் கொணரக் கூடிய  மேகமாகவும் இது இருக்கலாம். எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.

📚 புகாரி:3206

       🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

_ஆக்கம்👇_
📝  *உலமாக்கள் குழு*🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 06 / 2 / 17

🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭

No comments:

Post a Comment