Saturday, 4 February 2017

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : அ


💧☂💧☂💧☂💧☂💧☂💧

🎾 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🎾

🌙நபிமார்கள் வரலாறு🌟

ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : அ

👨‍👨‍👦 ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹுதை (நபியாக) அனுப்பினோம்.

📗 அல்குர்ஆன்:7:65

📽 ஆது என்பது அரபு நாட்டின் மிகப்பழமையான ஒரு சமுதாயமாகும். இவர்களைப் பற்றி புனிதக் குர்ஆனில் 25 இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சமுதாயம் தென் அரபு நாட்டில் வசித்தனர். இவர்கள் ஓமனில் இருந்து ஏமன் வரை 13 சதவீத நிலப்பரப்பில் பரந்திருந்தனர்.

🎇இவர்களின் தலைநகர் ஹளர மவ்த் என்ற ஏமன் நகராகும். இவர்கள் நூஹ் அலை அவர்களுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர்கள் ஆவார்கள்.

⌛தங்கள் காலத்தில் பெரும் வலிமை கொண்டவர்களாகவும்,கட்டடக் கலையில் பெரும் வல்லுநர்களாகவும் திகழ்ந்தனர். மலைகளைக் குடைந்து, செதுக்கி பிரம்மாண்டமான, ஆடம்பரக் கட்டங்களைக் கட்டுவது இவர்களின் பொழுதுபோக்காக இருந்தது.

🍈 இவர்கள் செல்வ போதையில் உல்லாசத்தில் மூழ்கியிருந்தனர். எளியோரை வதைப்பது, உண்மைக்கு முரண்படுவது, செல்வம் மற்றும் தங்களின் வலிமையை எண்ணி, அகந்தை கொள்வது இவர்களின் இயல்பாக இருந்தன.

       🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

_ஆக்கம்👇_
📝  *உலமாக்கள் குழு*🏅

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 04 / 2 / 17

🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭


No comments:

Post a Comment