💧☂💧☂💧☂💧☂💧☂💧
🎾 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 🎾
🌙நபிமார்கள் வரலாறு🌟
ஹுத் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : ஆ
✨ ஆது சமூகத்தார், இணைவைப்பதிலும், சிலை வணக்கத்திலும் எல்லை மீறிய போது, அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக ஹுத் அலை அவர்களை அல்லாஹ் நபியாக அனுப்பினான். இவர்கள், தமது சமுதாயத்தாரை ஓரிறைக் கொள்கை மற்றும் இறைவனின் வணக்கத்தின்பால் அழைப்பு விடுத்தார். இணை வைத்தலையும், சிலை வழிபாட்டையும், பிறரைத் துன்புறுத்துவதையும், அத்து மீறுவதையும் தடுத்தார்கள்.
👥 என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனின்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (இறைவனை) அஞ்சமாட்டீர்களா? என அவர் (ஹுத் அலை) கேட்டார்.
📒 அல்குர்ஆன்:7:65
☝ நான் உங்களுக்கு நம்பிக்கையுள்ள தூதராவேன்.
எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுபடுங்கள்!
நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.
📙 அல்குர்ஆன் 26:125-127
👨👨👦 "என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப் பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி புறக்கணிக்காதீர்கள்.
📕 அல்குர்ஆன் 11:52
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
_ஆக்கம்👇_
📝 *உலமாக்கள் குழு*🏅
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 04 / 2 / 17
🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭
No comments:
Post a Comment