*📖திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு*
*பாகம்3*
*குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது❓*
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.
🔘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.
🔘தாயின் வயிற்றில் இருக்கும்போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார்.
🔘அவரது மரணத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.
🔘சிறுவராக இருந்தபோது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரிய வந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.
🔘இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டார்கள்.
🔘25வது வயதில் தம்மைவிட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள்.
🔘அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25 ஆம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 04-02-2017.

No comments:
Post a Comment