Saturday, 4 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண்* 368


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
368:

🎯 *அ) நூஹ் (அலை) அவர்கள் தம் சமூகத்தாரிடம் நான் தூதன் என்று கூறிவிட்டு என்ன செய்ய சொன்னார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:101-110"*

✅பதில்:
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் என்று சொன்னார்கள்.

ஆதாரம்:-
*அல்குர்ஆன்:*26:107,108,110

📖நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
(அல்குர்ஆன் : 26:107)

📋ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
(அல்குர்ஆன் : 26:108)

📙ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
(அல்குர்ஆன் : 26:110)

🎯ஆ) *எத்தகைய செயலை செய்பவருடைய தேவையை அல்லாஹ் நிறைவு செய்கிறான் என்று பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில்:
சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை.

ஆதாரம்:-
*புகாரி:*2442,6951,
*முஸ்லிம்:*5036,

📕2442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📚6951. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்: அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவுமாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகிறான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.20
ஸஹீஹ் புகாரி.

📖5036. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டு விடவுமாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

🌰1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🌰2. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
🌰3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
🌰4. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🌰5. பஷீருத்தீன் -சம்பைப்பட்டிணம் 2
🌰6. முஹம்மது பைசல் காண் - திருநெல்வேலி 2
🌰7. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
🌰8. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🌰9. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை)2
🌰10. இர்ஃபான் - பண்டாரவாடை 1
🌰11. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
🌰12. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
🌰13. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🌰14. அமீன் - திருநெல்வேலி 1
🌰15. ஹக்கிம் - தென்காசி 2
🌰16. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
🌰17. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 1
🌰18. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

🏵1. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
🏵2. நூகு அமீர் -கீழக்கரை 2
🏵3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
🏵4. ஹுசைன் - நாகர்கோவில் 2
🏵5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
🏵6. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
🏵7. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
🏵8. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
🏵9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

💐💐💐💐💐💐💐💐💐💐💐

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *04-02-2017*

No comments:

Post a Comment