🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵⚓🏵
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் : 9
☀ இறந்தவர்களை அல்லாஹ் எப்படி உயிர்பிக்கிறான்:
இப்ராஹீம் அலை நம்ரூதிடம்,"என் இறைவன் உயிர்பிப்பான்;இறக்கச் செய்வான்"என்று கூறினார்கள்.இது அல்லாஹ்வால் முடியும் என்பதை உறுதியாக அறிந்திருந்த அவர்கள்,இதைக் கண்ணால் பார்த்து மேலும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள்.
🍀 இப்ராஹீம் அலை அவர்களின் கேள்வி:
எனவே தான்,இப்ராஹீம் அலை அவர்கள்,என் இறைவா!இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக'என்று கேட்டார்கள்.அப்போது அதை நீ நம்பவில்லையா?என்று அல்லாஹ் கேட்டான்.அதற்கு அவர் 'அவ்வாறன்று நம்பியிருக்கிறேன்;எனினும் எனது உள்ளம் நிம்மதியடைவதற்காக கேட்கிறேன்'என்று கூறினார்.
அதற்கு இறைவன் "நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றைத் துண்டுதுண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக"பின்னர் அவற்றின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையில் வைப்பீராக.பின்னர் அவற்றை நீர் கூப்பிடுவீராக.அவை உம்மிடம் விரைந்து வந்துவிடும்.அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் நிறைந்தவனும் ஆவான் என்பதை அறிந்து கொள்வீராக"என்று அல்லாஹ் கூறினான்.
📗அல்குர்ஆன் 2:260
இப்ராஹீம் அலை அவர்கள் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை அறுத்து பல துண்டுகளாக ஆக்கினார்கள்.அவற்றின் இறக்கைகளைப் பிய்த்து பல.பாகங்களாகக் கிழித்தார்கள்.பின்பு நான்கு பறவைகளின் கூறுகளையும் கலந்தார்கள்.அதன்பின் அவற்றைப் பல கூறுகளாக பிரித்து ஒவ்வொரு கூறையும் ஒவ்வொரு மலையில் வைத்தார்கள்.
💍 பின்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவற்றை அழைத்துவிட்டு,அவை எப்படி உயிர்பெற்று வருகின்றன என்பதைப் பார்க்கலானார்கள்.உடனே அப்பறவைகளின் இறக்கை,இரத்தம்,சதை உள்ளிட்ட பாகங்கள் (வேறு மலையில் இருந்த) அவற்றின் மற்ற பாகங்களை நோக்கி பறந்து சென்று அவற்றுடன் இணைந்து கொண்டன.இறுதியில் ஒவ்வொறு பறவையும் தனியாக அவர்களிடம் விரைந்து வந்தன.
(இறந்து போனவற்றை மீண்டும் அல்லாஹ்வால் உயிர்ப்பிக்க முடியும் என்பதை) இப்ராஹீம் அலை அவர்கள் நேரடியாகப் பார்த்து,உள்ளம் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் இந்த ஏற்பாட்டை செய்தான்.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
📝 உலாமாக்கள் குழுமம்
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 27 / 2 / 17
☂☂☂☂☂☂☂☂☂☂☂
No comments:
Post a Comment