🕋 *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்*
‼ *இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!*
தொடர் :6
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
📗 அல்லாஹ் தன் திருமறையில் தீமையைக் கண்டால் கோபம் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான். (20:85,86) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்: உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்துவிட்டான் என்று (இறைவன்) கூறினான். உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார் - என்று குறிப்பிடுகிறான். தன் சமுதாயத்தை வழிகெடுத்தவன் மீது மூஸா (அலை) அவர்கள் கோபம் கொள்கிறார்கள். இது நன்மைக்காக.
🙅🏻♂ கோபம் கொள்ளாதே என்று ஒரு நபித்தோழருக்கு உபதேசம் சொன்ன நபி (ஸல்) அவர்களே, சில சந்தர்ப்பங்களில் நன்மையான செயலுக்காக கடுமையாக கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஹதீஸில் காணமுடிகிறது. ஒரு தடவை குர்ஆனில் ஒரு வசனம் தொடர்பாக சண்டையிட்டுக் கொண்ட இருவரின் சப்தத்தைக் கேட்டு தமது முகத்தில் கோபம் தென்பட நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, உங்களுக்கு முன்னிருந்தோர் வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர் என்று கோபப்பட்டுக் கூறினார்கள்.
📚 (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) – முஸ்லிம்.
உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரியில் இடம்பெறும் மற்றொரு ஹதீஸில், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, இன்ன மனிதர் எங்களுக்கு தொழுகையை நீட்டி (நீண்ட நேரம் ஆக்குகிறார்).
🕌 இதனால் நான் சுப்ஹுத் தொழுகையில் கலந்து கொள்ள பின் தங்கி விடுகிறேன் என்று கூறினார். (உடனே நபி (ஸல்) அவர்கள் கடும் கோபம் அடைந்தார்கள்). அவர்கள் அன்று கோபம் கொண்டதைவிட வேறோரு நாளில் அதுபோல் பார்த்ததில்லை. நபியவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்களில் சிலர் வெறுக்க வைக்கக் கூடியவர்களாக உள்ளனர். மக்களுக்காக உங்களில் எவர் இமாமத் செய்தாலும் அவர் அதை சுருக்கமாக செய்யட்டும். அவரின் பின்னே (தொழும் மக்களில்) முதியவர், சிறியவர், தேவையுடையவர் என உள்ளனர் என்று கூறினார்கள்.
🕋 மார்க்க விஷயங்களிலும், அநீதிக்கு எதிராகவும் கோபம் கொள்வதில் இஸ்லாம் எப்பொழுதும் தடை விதிப்பதில்லை. ஆனால் நியாயமற்ற கோபம் எந்த இடத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் கட்டளையிடுகிறது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கோபத்தை விடுவதே சிறந்தது.
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்!
சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!
அல்லாஹ்வின் அடியார்களே!
(அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்!
அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்!
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்!
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
*இன்ஷா அல்லாஹ் மற்ற ஒரு தொடரில் சந்திப்போம்*
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
✍🏻 பதிவு நாள்:01-02-17
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment