🌲🎄💖🌷02-02-17🌷💖🎄⛳
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
"
📚 அல்குர்ஆன் 33:6
🌲⛩🌷⛩🌷⛩💓🌷⛩⛩🌷🎄
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வுடைய.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!”
🎭அறிவிப்பாளர் :
அனஸ்(ரலி)
📖நூல் :
ஷஹீஹ் புகாரி - 1867
🌹🌲💕🌹💕🌲🌹💕🌲🌹💕🌲
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
No comments:
Post a Comment