*🕋 மார்க்க கேள்வி எண்* 384:*
🎯 *அ) கண் மூடி திறப்பதற்குள் சிம்மாசனம் எவ்வாறு கொண்டு வரப்பட்டது❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:31-40"*
✅பதில்:
*இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர் மூலமாக*
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:40*
📋இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
(அல்குர்ஆன் : 27:40)
🎯ஆ) *பிறரிடம் யாசகம் கேட்பதைக் காட்டிலும் சிறந்தது எது என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
*ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும்.*
ஆதாரம்:- *ஸஹீஹ் புகாரி:1471, 2074,2075,2373,2374*
📝1471. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.'
ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📒2074 2075. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விறகச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.'
இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📚2373. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்த விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரின் முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்று வதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம்.
என ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📖2374. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் விறகு (சேகரித்து அதன்) கட்டு ஒன்றை முதுகில் சுமந்து (விற்கச்) செல்வது அவர் ஒருவரிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். ஏனெனில், (அப்படிக் கேட்கும் போது) அவர் இவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; கொடுக்காமலும் போகலாம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
3. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
4. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. ஹக்கிம் - தென்காசி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
9. ஷாஜகான் - சென்னை 1
10. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
11. முஹம்மது நலீஃப் மைதீன் - சிவகங்கை 1
12. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. அப்துல் பாசித் - சவுதி 2
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
8. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
9. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
11. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
12. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *21-02-2017*
No comments:
Post a Comment