Monday, 20 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண் 383*


*🕋  மார்க்க கேள்வி எண் 383*

🎯 *அ) ஸுலைமான் (அலை) அவர்கள் அனுப்பிய கடிதம் என்ற வார்த்தையைக் கொண்டு துவங்கி இருந்தது❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:21-30"*

✅பதில்:
 “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்”

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:30*
📒நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
(அல்குர்ஆன் : 27:30)

🎯ஆ) *உயிரினங்களினுடைய உருவத்தை வரைபவர் மறுமையில் என்ன செய்யப்படுவார்? மேலும் அவரிடம் என்ன சொல்லப்படும் என பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில்:
😳வேதனை செய்யப்படுவார்.
⭕நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் பார்க்கலாம் என்று சொல்லப்படும்.

ஆதாரம்:- *ஸஹீஹ் புகாரி: 2105,2225,5957,7557,7558*
*ஸஹீஹ் முஸ்லிம்: 4288*

📝2105. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் 'இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📕2225. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.
ஸஹீஹ் புகாரி.

📋5957. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி(ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், 'நான் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'இந்தத் திண்டு என்ன?' என்று கேட்டார்கள். நான், 'இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)' என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📃7557.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைப்போர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம் 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)' என்று சொல்லப்படும்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📚7558. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைத்தோர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம் 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)' என்று சொல்லப்படும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

4288. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிரினங்களின் உருவங்களைத் தயாரித்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப் படுவார்கள். அவர்களிடம் "நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. முஹம்மது நலீஃப் மைதீன் - சிவகங்கை 1
3. ஹக்கிம் - தென்காசி 2
4. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
5. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
8. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
9. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
10. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
11. அபூதல்ஹா - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
7. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
8. நூகு அமீர் -கீழக்கரை 2
9. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
10. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *21-02-2017*

No comments:

Post a Comment