*🕋 மார்க்க கேள்வி எண் 382:*
🎯 *அ) ஸுலைமான் (அலை) அவர்கள் எந்த பறவையைக் காணவில்லை என்று கேட்டார்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:11-20"*
✅பதில்:
ஹுத் ஹுத் பறவைவயை
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 27:20*
📙அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 27:20)
🎯ஆ) *எந்தசமுதாயம் காலத்தினால் பின் தங்கியவர்களாகவும் அந்தஸ்த்தினால் முந்தியவர்களாகவும் ஆவார்கள் என பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்ளுடைய சமுதாயம்.
ஆதாரம்:- *ஸஹீஹ் புகாரி : 238,876,896,6624,6887,7036,7495*
*ஸஹீஹ் முஸ்லிம்: 1549,1550,1551,1552*
📜238. 'நாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருக்கிறோம்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
🎓876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📄896. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களுக்கு அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📖6624. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.5
ஸஹீஹ் புகாரி.
📚7036. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.55
ஸஹீஹ் புகாரி.
📃7495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமைநாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.138
ஸஹீஹ் புகாரி.
📋1549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாவோம்" என்றே ஹதீஸ் தொடங்குகிறது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📕1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
📝1551. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்பே நமக்கு வேதம் வழங்கப்பெற்றது. இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளைத் தமது வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் அவர்கள் (அனைவரும்) நம்மைப் பின் தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) யூதர்களுக்கு நாளை (சனிக்கிழமை)யும் கிறித்தவர்களுக்கு மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாட்களாகும்).- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
📒1552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், நமக்கு முந்தைய (யூதர் மற்றும் கிறித்தவ) சமுதாயத்தாரை (வார வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (வார வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு வெள்ளிக்கிழமையை அறிவித்தான். (வரிசை முறையில்) வெள்ளி, சனி, ஞாயிறு என அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப் படுபவர்களாகவும் இருப்போம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி 2
2. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 1
3. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
4. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
8. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
9. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
10. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
11. ஹக்கிம் - தென்காசி 2
12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
6. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
7. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
💰💰💰💰💰💰💰💰💰💰💰
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
💰💰💰💰💰💰💰💰💰💰💰
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *21-02-2017*
No comments:
Post a Comment