*🕋 மார்க்க கேள்வி எண் 380: 🕋 *
🎯 *அ) எவர்களைத் தவிர மற்றவர்கள் குற்றவாளிகள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:221-227"*
✅பதில்:
எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் அதற்காக பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர மற்றவர்கள் குற்றவாளிகள் தாம்.
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 26:227*
📃ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
(அல்குர்ஆன் : 26:227)
🎯ஆ) *பெண்களுடைய அறிவின் குறைபாடாக பெருமானார் கூறியது யாது❓*
✅பதில்:
ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு தான் பெண்களின் சாட்சியம் அதுதான் அவளுடைய அறிவின் குறை பாடாகும்.
ஆதாரம்:-
*புகாரி: 2658*
*முஸ்லிம்: 132*
📖2658. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
'பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?' என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (பாதியளவு தான்)' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதுதான் அவளுடைய அறிவின் குறை பாடாகும்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📙132. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்), "பெண்கள் சமுதாயமே! தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, "நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் அதிகமாகச் சாபம் கொடுக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் காணவில்லையே" என்று பதிலளித்தார்கள்.
அப்பெண்மணி, "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகராகிறது. இதுதான் (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழாமல் இருந்துகொண்டிருக்கிறாள்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கிறாள். இதுதான் (அவளுடைய) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
3. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
6. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 1
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
9. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
10. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
11. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
12. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 1
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
4. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
5. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
6. நூகு அமீர் -கீழக்கரை 2
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
9. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
10. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை)1
🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 2
🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *17-02-2017*
No comments:
Post a Comment