Sunday, 12 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண்* 376:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
376:

🎯 *அ) சுஐப் (அலை) அவர்களை அவர்களுடைய சமூகத்தார்கள் அவருடைய சொல்லை உண்மைப்படுத்த என்ன செய்ய சொன்னார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:181-190"*

✅பதில்:
வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்ய சொன்னார்கள்.

ஆதாரம்:-
*அல்குர்ஆன்: 26:187*
📕“எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”
(அல்குர்ஆன் : 26:187)

🎯 ஆ) *நமது உடலுறுப்பில் எந்த ஒவ்வொன்றிற்கும் தர்மம் செய்ய வேண்டியது கடமை என பெருமானார்  கூறினார்கள்❓*

✅பதில்:
 ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும்

ஆதாரம்:-
*புகாரி: 2707,2891,2989*
*முஸ்லிம்: 1302,1835*

📚2707. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📝2891. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📜2989. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📖1302. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்;இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📋1835. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸ்களாகும். பின்வரும் ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

🍡1. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்)1
🍡2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 1
🍡3. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
🍡4. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
🍡5. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 1
🍡6. முபாரக் - சென்னை 1
🍡7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🍡8. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
🍡9. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 1
🍡10. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🍡11. ஹக்கிம் - தென்காசி 2
🍡12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🍡13. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

🍬1. நூகு அமீர் -கீழக்கரை 2
🍬2. ஹுசைன் - நாகர்கோவில் 2
🍬3. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
🍬4. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
🍬5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
🍬6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
🍬7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2

🍬8. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
🍬9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
🍬10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2

🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋

🔵1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1

🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋🔋

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *13-02-2017*

No comments:

Post a Comment