Sunday, 12 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண்* 377


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
377:

🎯 *அ) குற்றவாளிகளின் இதயங்களில் எதனை புகுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:191-200"*

✅பதில்:
 குர்ஆனை

ஆதாரம்:-*அல்குர்ஆன்: 26:199 & 200*

📋அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 26:199)

📖இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
(அல்குர்ஆன் : 26:200)

🎯ஆ) *ஜுரம் எதனால் உண்டாகுகிறது என பெருமானார்  கூறினார்கள்❓*

✅பதில்:
*நரகத்தின் வெப்பக் காற்றினால் (அ) நரகத்தின் கடுமையான வெப்பத்தால் (அ) நரகத்தின் பெருமூச்சினால்*

ஆதாரம்:-
*ஸஹீஹ் புகாரி: 3262, 3263, 3264, 5723, 5725, 5726*

*ஸஹீஹ் முஸ்லிம்: 4441, 4442,4443, 4444, 4445, 4446, 4447*

📜3262. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.
என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📖3263. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📋3264. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.
என இப்னு உமர்(ரலி) அவர் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புஹாரி.

📚5723. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.
அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்கள்.
இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) '(இறைவா!) எங்களைவிட்டு நரகத்தின் வேதனையை நீக்குவாயாக' என்று பிரார்த்தித்துவந்தார்கள்.53
ஸஹீஹ் புகாரி.

📝5725. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📕5726. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள்.
என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📙4442. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் அணைத்து விடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📒4443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் அணைத்து விடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📃4444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📝4445. ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் காய்ச்சல் ஏற்பட்ட பெண் கொண்டுவரப்பட்டால், தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவளது சட்டையின் கழுத்துப் பகுதியில் ஊற்றி விடுவார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "காய்ச்சலைத் தண்ணீரால் தணியுங்கள். (ஏனெனில்) காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது" என்று கூறினார்கள்" என்றும் சொல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தண்ணீரை எடுத்து அவளது ஆடையின் உட்பகுதியில் ஊற்றினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "காய்ச்சல், நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம்.

✏4446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல், நரகத்தின் கடுமையான கொதிப்பால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணித்துக்கொள்ளுங்கள்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2

2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 1
4. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
5. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
6. அபூதல்ஹா - திருநெல்வேலி1
7. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
8. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
9. ஹக்கிம் - தென்காசி 2
10. முபாரக் - சென்னை 1
11. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
12. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 1
13. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 1
14. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
2. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
3. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
5. நூகு அமீர் -கீழக்கரை 2
6. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2

⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை ) 1

⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *13-02-2017*

No comments:

Post a Comment