Friday, 10 February 2017

*🕋மார்க்க கேள்வி எண்* 375:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
375:

🎯 *அ) எனக்குரிய கூலி இறைவனிடமே இருக்கிறது" என்று கூரியவர் யார்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:171-180"*

✅பதில்:
ஷுஐப் (அலை) அவர்கள்.

ஆதாரம்:-
*அல்குர்ஆன்: 26:177 & 180*

📋ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
(அல்குர்ஆன் : 26:177)

📕“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
(அல்குர்ஆன் : 26:180)

🎯ஆ) *குர்ஆன் ஓதுகின்ற நல்லவரை மற்றும் குர்ஆன் ஓதுகின்ற தீயவனை பெருமானார் எதோடு எவ்வாறு உவமையாக கூறினார்கள்❓*

✅பதில்:
*குர்ஆன் ஓதுகின்ற நல்லவரை* *எலுமிச்சை*யுடன் உவமையாக கூறினார்கள்.
*அதன் சுவையும் நன்று, வாசனையும் நன்று*.

*குர்ஆன் ஓதுகின்ற தியவனை* *துளசிச் செடியுடன்* உவமையாக கூறினார்கள்.
அதன் *வாசனை நன்று, சுவையோ கசப்பு*

ஆதாரம்:-
*புகாரி:* 5020,5059,5427
*முஸ்லிம்:*1461

📖5020.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்ற. மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், போPச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்துகொண்டு, குர்ஆனையும் ஓதிவருகிறவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; சுஐவயோ கசப்பு. தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி.

📜5059.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், போPச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளிசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் 'கசப்பானது' அல்லது 'அருவருப்பானது' அதன் வாடையும் வெறுப்பானது.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📝5427. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று; சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது; (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானதாகும்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📚1461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று; சுவையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது, பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதற்கு வாசனை கிடையாது. (ஆனால்) அதன் சுவை நன்று. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதிவருகின்றவரின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதாமலிருப்பவரின் நிலையானது, குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு வாசனையும் கிடையாது; சுவையோ கசப்பு.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நயவஞ்சகன்" என்பதற்கு பதிலாக "தீயவன்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�

1. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 1
3. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
4. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
5. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
6. முஹம்மது நலீஃப் மைதீன் - சிவகங்கை 1
7. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
9. ஹக்கிம் - தென்காசி 2
10. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
11. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
12. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
13. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
14. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
15.ஷாஜகன் - சென்னை 1
16. முபாரக் - 1

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
2. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
3. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
4. நூகு அமீர் -கீழக்கரை 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
8. ஹுசைன் - நாகர்கோவில் 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
11. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2

💢💢💢💢💢💢💢💢💢💢💢

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1

💢💢💢💢💢💢💢💢💢💢💢

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *11-02-2017*




No comments:

Post a Comment