*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
373 *(மூன்று மதிப்பெண் கேள்வி, ஹதீஸ் கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள்)* (பதில்):
🎯 *அ) ஸாலிஹ் அலை- யின் சமூகத்தார் எதனால் கைசேதப்பட்டார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:151-160"*
✅பதில்:
அல்லாஹ் அவர்களுக்கு அத்தாட்சியாக கொடுத்த ஒட்டகத்தை கொன்றதினால்.
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 26:155 & 157*
📕அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
(அல்குர்ஆன் : 26:155)
📕அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
(அல்குர்ஆன் : 26:157)
🎯 ஆ) *எது இல்லாமல் மற்றவர்கள் மீது சந்தேகம் கொள்வதைக் குறித்து பெருமானார் அவர்கள் ஏன் நம்மை எச்சரிக்கிறார்கள்❓*
✅பதில்:
அடிப்படையில்லாமல் மற்றவர்கள் மீது சந்தேகம் கொள்வதைக் குறித்து எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும்.
✅பதில் :
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது,பெரும் பொய்யாகும்.
ஆதாரம்:-
*புகாரி: 6064, 6066, 6724*
*முஸ்லிம்: 5006*
📜6064. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📝6066. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேம்ப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📖5006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது,பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
1. அமீன் - திருநெல்வேலி 1
2. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
3. ஹபிப் ரஹ்மான் - துபாய் 3
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 3
6. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 3
7. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 3
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 3
9. அபூதல்ஹா - திருநெல்வேலி 3
10. ஹக்கிம் - தென்காசி 3
11. கத்தாப் - கந்தரவக்கோட்டை 3
12. பீர் முஹம்மது - திருநெல்வேலி 3
13. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 3
14. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 3
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஜீப் - சென்னை (ராயபுரம்) 3
2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 3
3. நூகு அமீர் -கீழக்கரை 3
4. அப்துல்காதர் - திருநெல்வேலி 3
5. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 3
6. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 3
7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 3
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 3
9. ஹுசைன் - நாகர்கோவில் 3
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 3
11. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 3
⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵⛵
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *09-02-2017*
No comments:
Post a Comment