அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" (நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
"
📚 அல்குர்ஆன் : 4:113
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்இ ”வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்."
🎭அறிவிப்பாளர் :
அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ (ரஹ்)
📓நூல் :
ஸஹீஹ் முஸ்லிம்-1546
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்* 🌴
🕋🕋🕋🕋9-2-17🕋🕋🕋🕋
No comments:
Post a Comment