Wednesday, 8 February 2017

*💐ஃபஜ்ர் தொழுகைக்கு உங்கள் பிள்ளைகளை எழுப்புவது கடினமாக இருக்கிறதா ? ? ?💐*


*💐ஃபஜ்ர் தொழுகைக்கு உங்கள் பிள்ளைகளை எழுப்புவது கடினமாக இருக்கிறதா ? ? ?💐*

*இதோ இந்த அறிஞரின் உபதேசத்தை கேளுங்கள்...*

       *ஒரு பெண்மணி ஒரு அறிஞரிடத்தில் சென்று  என் குழந்தைகளை ஃபஜ்ர் தொழுகைக்கு எழுப்புவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என்ன செய்வது  என்று கேட்டார்.*

        *அதற்கு அந்த அறிஞர் உங்கள் பிள்ளைகள் தூங்கும் அறையில் திடிரென்று தீப்பிடித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.*

      *அதற்கு அந்த பெண்மணி நான் அவசரமாக எழுப்புவேன் என்றார்,*

*அப்போதும் எழுந்திரிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்,*

*அதற்கு அந்த பெண்மணி கழுத்தைப் பிடித்தாவது எழுப்புவேன் என்றார்.*

   *அறிஞர் கூறினார், உலக நெருப்பை விட்டும் பாதுகாக்க இவ்வாறு செயல்ப்டும் நீங்கள், நரக நெருப்பை விட்டுப் பாதுகாக்கவும் அவ்வாறே செயல்படுங்கள் என்றார்.*

*சிந்திப்போம், செயல்படுவோம்..*
*மாறுவோம், மாற்றுவோம்..*

பதிவு நாள்: *09-02-2017*

No comments:

Post a Comment