Tuesday, 7 February 2017

*🕋 மார்க்க கேள்வி எண்* 371:


*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
371:

🎯 *அ) ஹூது (அலை) அவர்களுடைய சமூகத்தார்கள் அவர்களுக்கு உபதேசம் செய்வதைக் குறித்து என்ன கூறினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா  (கவிஞர்கள்) 26:131-140"*

✅பதில்:
எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்

ஆதாரம்:- *அல்குர்ஆன்: 26:136*

📙(இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 26:136)

🎯ஆ) *மற்றவர்களுடைய நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவருக்கு மறுமை நாளில் என்ன செய்யப்படும் என்று பெருமானார் கூறினார்கள்❓*

✅பதில்:
ஏழு நிலங்களை கழுத்தில் மாலையாகக் கட்டி தொங்கவிடப்படும்

ஆதாரம்:-
*புகாரி: 2452,2453,3195,3198* *முஸ்லிம்: 3291,3292,3293,3294*

📚2452. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.

📋2453. அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்.
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📖3195. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அபூ ஸலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக் கொள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' எனக் கூறினார்கள்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📕3198. ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) அறிவித்தார்.
'அர்வா' என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறை வைத்துவிட்டதாகக் கருதி (மதீனாவின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின் போது) நான், 'அவரின் உரிமையில் எதையும் நான் குறைவைப்பேனா?' 'ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்' என்று சொன்னேன்.
ஸஹீஹ் புகாரி.

📒3291. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
 சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார் என அர்வா பின்த் உவைஸ் (அல்லது உனைஸ்) என்ற பெண் குற்றம் சாட்டினார். (அப்போதைய மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமிடம் சயீதுக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?" என்று கேட்டார்கள்.
அதற்கு மர்வான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், "யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்"  என்றார்கள்.அதற்கு மர்வான், "இதற்குப் பின் உங்களிடம் நான் ஆதாரம் கேட்கமாட்டேன்" என்றார்கள்.
அப்போது சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் "இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் அவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு" என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு குழியில் (தவறி) விழுந்து மாண்டுபோனாள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📜3292. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதி யி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டாமல் விடுவதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.


3293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையின்றி ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டாமல் விடுவதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.



📃3294. அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனக்கும் என் கூட்டத்தாருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்துவந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூசலமா! மண்ணாசையைத் தவிர்த்துக் கொள்க! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அநியாயமாக ஒரு சாண் அளவு நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்று கூறியுள்ளார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
2. முஹம்மது பைசல் காண் - திருநெல்வேலி 2
3. பஷீருத்தீன் -சம்பைப்பட்டிணம் 2
4. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 1
5. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 1
6. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
7. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
9. அமீன் - திருநெல்வேலி 2
10. முஹம்மது ஃபயாஸ் - சென்னை 1
11. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
12. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 1
13. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
14. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
15. ஹக்கிம் - தென்காசி 1
16. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
17. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. நூகு அமீர் -கீழக்கரை 2
2. ஹுசைன் - நாகர்கோவில் 2
3. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
4. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 2
5. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
7. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 1
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 1
10. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *08-02-2017*

No comments:

Post a Comment