Friday, 10 February 2017

*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 14 🌍🌍*


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் தொடர் - 14 🌍🌍*

*🎯மாபெரும் பத்து அடையாளங்கள்*

*2-1. தஜ்ஜால்*

*🚫தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்*

🔘ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் இருப்பான். அது எந்தக் கண் என்பதில் இருவிதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்று ஊனமுற்றிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)*
*நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127 ,3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, ,7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: அனஸ் (ரலி),*
*நூல்: புகாரி 7131,*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)*
*நூல்: புகாரி 3441, 3440, 4403, 5902, 6999, 7026, 7123, 7128, 7407*

🔘ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப் பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன.

🔘ஒரு கண் ஊனமான தஜ்ஜாலின் மற்றொரு அடையாளம் அவனது இரு கண்களுக்கிடையே காஃபிர்' என எழுதப்பட்டிருக்கும். அதை அனைவரும் படிக்கும் வகையில் அந்த எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்' என்று எழுதப் பட்டிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: அனஸ் (ரலி),*
*நூல்: புகாரி 7131, 7404*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத எல்லா முஃமின்களும் படிக்கும் விதமாக தஜ்ஜாலின் கண்களுக்கிடையே காஃபிர்' என்று எழுதப்பட்டிருக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),*
*நூல்: முஸ்லிம் 5223*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய ஓரத்தில் கடினமான சதைக் கட்டி ஒன்று தென்படும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.*
*நூல்: முஸ்லிம் 5223*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஒரு கண் ஊனமுற்றிருந்தாலும் ஊனமடையாத மற்றொரு கண் பச்சை நிறக் கண்ணாடிக் கற்கள் போன்று அமைந்திருக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.*
*நூல்: அஹ்மத் 20220*

🔘இந்த வர்ணனையின் அடிப்படையில் அவனது முகம் கோரமாக அமைந்திருக்கும் என்று தெரிந்தாலும் அவனது உடலமைப்பில் கவர்ச்சியாகவும் சில உறுப்புகள் அமைந்திருக்கும்.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*அவன் சிவந்த நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.*
*நூல்: புகாரி 3441, 7026, 7128*

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*அவன் அதிக வெண்மை நிறமுடையவனாக இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.*
*நூல்: அஹ்மத் 2707, 2041*

🔘தஜ்ஜாலின் நிறம் குறித்து இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக் கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.

🔘ஒருவர் சிவந்த நிறமுடையவராகவும், அதிலும் அதிக சிவப்பு நிறமுடையவராக இருந்தால் அவரைப் பற்றி வெள்ளை நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு. சிவந்த நிறத்தவர் என்றும் கூறப்படுவதுண்டு.

🔘உதாரணமாக வெள்ளையர்கள் என்று ஆங்கிலேயர்களை நாம் குறிப்பிடுகிறோம். எந்த மனிதனும் வெள்ளை நிறத்தில் இருக்க முடியாது. சிவந்த நிறத்தைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறோம். அது போலவே இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.*
*நூல்: புகாரி 3441, 7026, 7128*

🔘குறிப்பிட்ட ஒரு மனிதனையே தஜ்ஜால் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்;தீய சக்தியை உருவகமாகச் சொல்லவில்லை என்பதை மேற் கண்ட அடையாளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த அடையாளங்கள் யாவும் அவன் வானத்துக்கும்,பூமிக்குமாக பிரம்மாண்டமாகத் தென்படுவான் என்ற கற்பனையையும் நிராகரிக்கின்றன.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

பதிவு நாள்: 10-02-2017*


No comments:

Post a Comment