Monday, 20 February 2017

இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் :- 04



🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅

🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰

🌙நபிமார்கள் வரலாறு🌟


 🎾 இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் :- 04

👲சிலை வணக்கம்புரிபவர்களுக்கு எதிராக இப்ராஹிம் நபியின் வாதம்:

இப்ராஹிம் அலை அவர்கள் தன் சமூகத்தாரின் அளவில் சிலை வணக்கத்திற்கு எதிராக,அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக புறப்பட்டார்கள்.

அவர் தன் தந்தையிடமும்,தன் சமூகத்தாரிடமும்,"இச்சிலைகளென்ன?அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக வழிபடுவதில் நிலைத்திருக்கிறீர்கள்"என்று கேட்டபோது,

அவர்கள்,"எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக (இருந்ததை) நாங்கள் கண்டோம்"என்று கூறினார்கள்.

🌽அதற்கவர்,"திட்டமாக நீங்களும்,உங்கள் மூதாதையர்களும் பகிரங்கமான வழிகேட்டிலேயேதான் இருந்துவிட்டீர்கள்"என்று கூறினார்.

அதற்கவர்கள்,"நீர் எங்களிடம் ஏதும் உண்மையானக் கொண்டு வந்திருக்கின்றீரா?அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா?என்று கேட்டனர்?"என்று கேட்டனர்.

🕸அதற்கவர்,(அவ்வாறு) அல்ல!உங்களுடைய இரட்சகன் (அவன்தான்) வானங்களுக்கும்,பூமிக்கும் இரட்சகனாவான்,அவனே அவற்றைப் படைத்தான்.இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன் "என்று (இப்ராஹிம் )கூறினார்.

(அல்குர்ஆன் அத்தியாயம் 21,வசனங்கள் 52 முதல் 56 வரை)

🌲மக்களில் இப்ராஹிம் நபியின் தந்தையே அவர்களை கடுமையாக எதிர்த்தார்கள்.தந்தைக்கும் மகனுக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தை தன் மகனிடத்தில் "இப்ராஹீமே நீ எனக்கு மிகப்பெரும் சோதனையாக இருக்கிறாய்.நீ எனக்கு மோசடி செய்துவிட்டாய்.எனக்கு தீங்கிழைத்துவிட்டாய்.என்று கூறினார்.

இப்ராஹிம் அலை அவர்கள் தன் தந்தையிடம் அழகான முறையில் இறைவனைப்பற்றி எடுத்துக் கூறினார்கள்.

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*

ஆக்கம் :👇
📝  உலாமாக்கள் குழுமம்🎖

🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 20 / 2 / 17

⚾💰⚾💰⚾💰⚾💰⚾💰⚾

No comments:

Post a Comment