🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾 இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் :- 05
🎗சிலைவணக்கத்திற்கு எதிராக இப்ராஹிம் அலை அவர்களின் பிரச்சாரம்:
தன் தந்தையிடத்தில் அழகிய முறையில் இப்ராஹிம் அலை பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
அவர் தன் தந்தையிடம் "என் தந்தையே!எதையும் செவியேற்காத,மற்றும் (எதையும்) பார்க்காத (நன்மையை ஈர்த்தும் தீமையைத் தடுத்தும்) உம்மைவிட்டும் எதையும் தடுக்காததை நீர் ஏன் வணங்குகிறீர்? என்று கூறியதை (நபியே!நினைவு கூறுவீராக!அப்போது)
🛤"என் தந்தையே!நிச்சயமாக நான் என்னிடம் அறிவிலிருந்து உமக்கு வந்திராதது திட்டமாக வந்திருக்கிறது.ஆகவே நீர் என்னைப் பின்பற்றுவீராக! அப்பொழுது நான் உமக்கு செம்மையான வழியைக் காட்டுவேன் (என்றும்),
என் தந்தையே!ஷைத்தானை நீர் வணங்காதீர்;நிச்சயமாக ஷைத்தான் மிகக் கிருபையுடையோனாகிய ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கின்றான் (என்றும்),
⌛"என் தந்தையே!மிகக் கிருபையுடையவனிலிருந்து வேதனை உம்மைப் பிடித்து அதனால் ஷைத்தானுக்கு நீர் சினேகிதராகிவிடுவதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்." (என்றும் கூறிய போது)
(அல்குர்ஆன் அத்தியாயம் 19:வசனங்கள் 42 முதல் 45 வரை)
இதனை செவியுற்ற அவருடைய தந்தை கோபத்தில் "இப்ராஹீமே! நீ இவ்வாறே சொல்லிக் கொண்டிருந்தால் உன்னை நான் கல்லால் அடித்து விரட்டுவேன்" என்று கூறினார்.
(அதற்கு இப்ராஹீம் )"உம்மீது சாந்தி உண்டாவதாக! (பின்னர் )நான் உமக்காக என் இரட்சகனிடத்தில் பாவமன்னிப்பு கோருவேன்;நிச்சயமாக அவன் என்னுடன் இரக்கமுடையோனாக இருக்கின்றான் "என்று கூறினார்.
📘அல்குர்ஆன் 19:47
இதற்குப் பிறகு, இப்ராஹிம் அலை அவர்கள் தன் வீட்டை விட்டும்,தன் சமூகத்தாரை விட்டும்,அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் விலகிக் கொண்டார்கள்.
உங்களையும்,அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளை விட்டு நான் விலகிக் கொள்கிறேன்;என் இரட்சகனையே நான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்;என் இரட்சகனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்பாக்கியமுடையவனாக ஆகாது இருக்கப்போதும் (என்றும் கூறினார்.
📕அல்குர்ஆன் 19:48
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
ஆக்கம் :👇
📝 உலாமாக்கள் குழுமம்🎖
🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 20 / 2 / 17
⚾💰⚾💰⚾💰⚾💰⚾💰⚾
No comments:
Post a Comment