🍮⚓🍮⚓🍮⚓🍮⚓🍮⚓🍮
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾 இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் :- 02
🍒 இப்ராஹிம் அலை அவர்களின் காலத்தில் மக்களின் நிலை:
மக்கள் இப்ராஹிம் நபியின் காலத்தில் மக்கள் மூன்றுபரிவினர்களாக இருந்தனர்.
முதல் பிரிவினர்:சிலைகளையும்,மரத்தாலும் கற்கலாலும் உண்டான சிலைகளை வணங்கினர்.
இரண்டாம் பிரிவினர்:நட்சத்திரங்களையும்,சூரியனையும்,சந்திரனையும் வணங்கி கொண்டிருந்தனர்.
மூன்றாம் பிரிவினர்:ஆட்சியாளர்களையும்,அதிகாரம் படைத்தவர்களையும் வணங்கி வந்தனர்.
🌍 இப்ராஹிம் அலை அவர்களின் பிறப்பு:
இந்தக் காலகட்டத்தில்தான் இப்ராஹிம் நபியவர்கள் பிறந்தார்கள்.இப்ராஹிம் நபியின் பொறுப்பாளரைப்பற்றி மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.
🍃 முதலாவது கருத்து:அவரின் தந்தை இப்ராஹிம் நபி பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார்.அவரின் சிறியதந்தை அவரை வளர்த்தார்கள்.சிறியதந்நையார் தந்தையின் அந்தஸ்தில் இருந்தார்.இப்ராஹிம் நபியவர்கள் அவரை தந்தை என்றே அழைத்துவந்தார்கள்.
இரண்டாவது கருத்து:அவர்களின் தந்தை மரணிக்கவில்லை.அவரின் பெயர் ஆஜர்.
🌱மூன்றாவது கருத்து:ஆஜர் என்பது சிலையின் பெயராகும்.இப்ராஹிம் நபியின் தந்தை சிலைவடிவமைப்பு தொழிலில் ஈடுபட்டு இருந்ததால் ஆஜர் என்ற சிலையின் பெயரைக் கொண்டே அவர் பிரபல்யமாக இருந்தார்.
🚶தன் சிறுவயதில் இருந்தே இப்ராஹிம் நபியவர்கள் தன் தந்தை செய்யும் சிலைகளை வெறுத்துவந்தார்கள்.தங்கள் கரத்தால் வடிவமைத்த சிலைகளை வழிபடுவது என்பது எப்படி அறிவுக்கு பொருத்தமாக உள்ளது?மேலும் இந்த சிலைகளால் சாப்பிடவோ,குடிக்கவோ,பேசவோ முடியாது.தன்னால் எந்த நல்லதையும்,கெட்டதையும் செய்துகொள்ள முடியாத நிலையில் பிறருக்கு அந்த சிலைகள் எப்படி நன்மையையும்,தீமையும் செய்து கொள்ள முடியும்?என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
ஆக்கம் :👇
📝 உலாமாக்கள் குழுமம்🎖
🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 18 / 2 / 17
🇲🇷💈🇲🇷💈🇲🇷💈🇲🇷💈🇲🇷💈🇲🇷
No comments:
Post a Comment