🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾 இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் :- 01
🔷 இறைவனின் உற்ற நண்பர்.அல்லாஹ் இவர்களை நபியாக தேர்ந்தெடுத்தான்.அனைவரையும் விட இவர்களை சிறப்புப்படுத்தினான்.இப்ராஹிம் அலை அவர்களின் சமூகம் நட்சத்திரங்களை வணங்கிவந்தனர்.இவ்வாறான வணக்கத்தை இவர்கள் விரும்பவில்லை.தன் சிறுபிராயத்தில் இருந்தே இறைவனைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.முடிவில் இறைத்தூதராக ஆனார்கள்.தன் சமூகத்தாரை ஓரிறைக் கொள்கையின் பால் அழைத்தார்கள்.எனினும் மக்கள் அவரை பொய்படுத்தினர்.அவரை நெருப்பில் போட்டார்கள்.அல்லாஹ் அவர்ளை நெருப்பிலிருந்து பாதுகாத்தான்.அல்லாஹ் நபிமார்களை இவர்களின் வம்சத்திலிருந்து உருவாக்கினான்.அவர்களுக்கு இஸ்மாயில்,இஸ்ஹாக் என இரு பிள்ளைகள் இருந்தனர்.இப்ராஹிம் அலை அவர்கள் தன்மகன் இஸ்மாயில் அலை அவர்களுடன் சேர்ந்து கஃபா ஆலயத்தை கட்டினார்கள்.
♻ இப்ராஹிம் அலை அவர்களின் அந்தஸ்து;உயர்வு:
1.உலுல் அஜ்ம் என்று பாராட்டப்படும் ஐந்து நபிமார்களில் இவர்களும் ஒருவர்.இந்த ஐந்து நபிமார்களிடமும் அல்லாஹ் உறுதியான உடன்படிக்கையை எடுத்துக்கொண்டான்.அவர்கள் நூஹ் அலை,இப்ராஹிம் அலை,மூஸா அலை,ஈஸா அலை,முஹம்மது நபி ஸல் அவர்கள்.
2.மிகப்பெரும் சோதனையைக் கொண்டு சோதிக்கப்பட்டு அதில் வெற்றியும் கண்டவர்கள்.(தன் முதிய பருவத்தில் பெற்றெடுத்த குழந்தையை அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க பலியிட துணிந்த அந்த காரியத்தை அல்லாஹ் மிகப்பெரும் சோதனை என தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.)
3.அல்லாஹ் முழுமனித சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டியாக,இமாமாக இவர்களை ஆக்கினான்.இவர்களின் சந்ததிகளில் இருந்தே நபித்துவத்தையும்,வேதங்களையும் தேர்ந்தெடுத்தான்.இப்ராஹிம் அலை அவர்களுக்குப் பின்தோன்றிய அனைத்து நபிமார்களும் அவர்களின் வம்சத்திலிருந்தே வந்தவர்கள் ஆவார்கள்.இறுதியாக வந்த நபி ஸல் அவர்களும் நபி இப்ராஹிம் அலை அவர்களின் வம்சாவழியிலிருந்து வந்தவர்களே.இப்படி ஒருநபி அனுப்பி வைக்கப்பட வேண்டுமென (நம்முடைய நபியைப்பற்றி)இப்ராஹிம் அலை அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தும் இருந்தார்கள்.அந்தப் பிராத்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
4.நமக்கு முஸ்லிம்கள் என முதன்முதலில் பெயர்சூட்டியதும் இப்ராஹிம் அலை அவர்களே ஆவார்கள்.
5.அல்லாஹ் இவர்களை தன்உற்றதோழராக எடுத்துக்கொண்டான்.வேறு எந்த நபிக்கும் இந்த சிறப்பு இல்லை.அதாவது இவர்களுக்கு (கலீலுல்லாஹ்- இறைவனின் உற்றநேசர்) என்ற சிறப்புப்பெயரும் உண்டு.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
ஆக்கம் :👇
📝 உலாமாக்கள் குழுமம்🎖
🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 18 / 2 / 17
⚾💰⚾💰⚾💰⚾💰⚾💰⚾

No comments:
Post a Comment