🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅🎪🌅
🔰 *அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 🔰
🌙நபிமார்கள் வரலாறு🌟
🎾 இறைத்தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு தொடர் :- 03
🌳சூரியனையும்,சந்திரனையும்,நட்சத்திரங்களையும் வணங்கிக் கொண்டிருந்த மக்களிடத்தில் இப்ராஹிம் நபி புரிந்த வாதம்:
🌑 இரவு அவரை மூடிக்கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்" எனக் கூறினார்.அது மறைந்தபோது "மறைபவற்றை நான் விரும்பமாட்டேன்" என்றார்.
சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன் என்றார்.அது மறைந்த போது "என் இறைவன் எனக்கு நேர்வழிகாட்டா விட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்" என்றார்.
🌞 சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்!இதுவே மிகப் பெரியது" என்றார்.அது மறைந்த போது என் சமுதாயமே!நீங்கள் இணைக்கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்"எனக் கூறினார்.
☁வானங்களையும்,பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தை திருப்பி விட்டேன்.நான் இணை கற்பித்தவல்லன்.(என்றும் கூறினார்.)
👨👦👦 அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர்."அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா?நீங்கள் இணைகற்பித்தவற்றுக்கு நான் அஞ்சமாட்டேன்.என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.)என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்.உணரமாட்டீர்களா?
அல்லாஹ் உங்களுக்கு சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணைகற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்?நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமறிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?(என்றும் அவர் கூறினார்.)
📙 அல்குர்ஆன்:அத்தியாம் 6,வசனங்கள் 76 முதல் 81 வரை.
🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....*
ஆக்கம் :👇
📝 உலாமாக்கள் குழுமம்🎖
🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿
🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 18 / 2 / 17
⚾💰⚾💰⚾💰⚾💰⚾💰⚾
No comments:
Post a Comment