Wednesday, 11 January 2017

அழகிய முறையில் வாழ்த்துவோம்


🎙 *மக்கள் மீடியா*​ 🎙

💐அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)💐

💥 *அழகிய முறையில் வாழ்த்துவோம்*💥

☝🏻 அல்லாஹ் தனது அனைத்து படைப்புகளையும் அதற்கு தக்க இணையான ஜோடிகளுடன் படைத்துள்ளான்.

🌴அதன் அடிப்படையில் மனிதர்களிலும் ஆண், பெண் என இருபாலாரைப் படைத்து, அவ்விரு பாலருக்குள் விருப்பப்பட்ட ஜோடிகளை அமைத்துக் கொண்டு வாழ, அல்லாஹ் அனுமதித்துள்ளான்.

💥 இப்படி ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் இந்த வாழ்வு-உறவை ‘திருமணம்’ என்கின்றார்கள்

👆🏻 இதை இஸ்லாம் *திருமண ஒப்பந்தம்* என்றழைக்கிறது.

💥நம்மில் பலர் திருமண  செய்துக் கொண்டவர்களாகவும், சிலர் திருமண  செய்துக் கொள்ள இருப்பவர் களாகவும் இருக்கிறோம்.

💥 நம்மில் பலர் உறவினர்கள்,நண்பர்களின் திருமண  நிகழ்வுகளில் அன்றாடும் கலந்து கொள்பவர்களாகவும் இருக்கின்றோம்.

💥திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் பலர் அங்கு திருமண  செய்துக் கொள்ளும்  மணமக்களை வாழ்த்தி மகிழச் செல்லுகின்றார்கள்.

💥பலர் பலவிதமாக மார்கம் அனுமதிக்காத வகையில் வாழ்த்துகிறார்கள்.

 💥 இஸ்லாமியர் களாகிய நாம் கூறும் வாழ்த்து, மனமக்களின் வாழ்வுக்காக இறைவனிடம் செய்யும் துஆவாக அமையனும் என்று இஸ்லாம் வலியுருத்திச் சொல்லுகிறது.  

❌ *ஆனால் நமது சமுகத்தில் மார்க்கம் கூறிய முறையில் பலர் வாழ்த்துவது கிடையாது*

💥சகோதரர்களே!

👍நீங்கள் புதுமணமக்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்களானால், மணமக்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்து நமது நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வாழ்த்து துஆவை சொல்லி வாழ்த்துங்கள்.

💥திருமண வாழ்த்து துஆ💥

*”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.*

      💥பொருள்: *அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.*  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).  நூல் : அஹ்மத், அபூதாவுத்.

💐 *சகோதரர்களேஅனைத்திலும் நமது மார்க்கம் நமக்கு கற்றுத்தந்த முறையில் அழகிய முறையில் வாழ்த்துவோம்.*

🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙



🇮🇳 *MAKKAL MEDIA*🇮🇳

📝பதிவுநாள்: 03  january 2017

No comments:

Post a Comment