Sunday, 1 January 2017

முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்:* 1⃣

🌈🎆🌈🎆🌈🎆🌈🎆🌈🎆🌈

🍇 *_அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)_* 🍇

*முஆத் பின் ஜபல் அல்-கஸ்ரஜி அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்:* 1⃣

🌴கலீஃபா உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு, தோழர் ஒருவரை அழைத்து பனூ கிலாப் கோத்திரத்தாரிடம் சென்றுவரச் சொன்னார். அரசு உதவி பெறத் தகுதியான ஏழை மக்களுக்குக் கருவூலத்திலிருந்து உதவித் தொகை எடுத்துச் சென்று வழங்க வேண்டும். ஸகாத் அளிக்க வேண்டியவர்களிடமிருந்து ஸகாத் திரட்டி வரவேண்டும். அவருக்கு அப்பணி இடப்பட்டது.

🌿“உத்தரவு கலீஃபா!" என்று உடனே கிளம்பிச் சென்றார் அத்தோழர். அது சற்று நீண்ட பயணம்.
கலீஃபாவின் தூதுவர் வந்திருக்கிறார் என்றதும் ஸகாத் செலுத்த வேண்டியவர்களெல்லாம் அள்ளி அள்ளி அளித்தார்கள். ஏழைகளுக்கெல்லாம் உதவித் தொகை சர்வ தாராளமாய் முறைப்படி வினியோகிக்கப்பட்டது. வந்த பணி திருப்தியுடன் நிறைவேற, தனக்கு இடப்பட்ட கட்டளைகளைத் திறம்பட முடித்து, பயணத்திலிருந்து திரும்பினார் அந்தத் தோழர். கழுத்தில் குதிரைச் சேணக் கம்பளி; வெறுங்கை. அதை வீசிக்கொண்டு அவர் வீடு வந்துசேர, அவரின் மனைவி திகைப்படைந்து விட்டார்.

🍃“என்ன இது? கவர்னருக்கு அழகா இது? தங்களது நீண்ட பயணத்துக்குக் கிடைத்த பரிசு இதுதானா? தங்களது பணிக்குரிய கூலி எங்கே?”
சற்றுக் கவனிக்க வேண்டும்; கிம்பளமெல்லாம் இல்லை! செய்த அரசுப் பணிக்குச் சம்பளமாகவோ, சன்மானமாகவோ கிடைக்கப்பெறும் பொருள்களைத்தான் அவருடைய மனைவி எதிர்பார்த்திருந்தார். நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் அப்படி எதுவுமேயின்றி 'வீசிய கை, வெறுங்கையோடு' கணவன் வீடு திரும்பி வந்தால்?
“ஓ! அதுவா? என்னைக் கண்காணிப்பவர் ஒருவர் இருந்தார். அவர் என்னுடைய நடவடிக்கைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அதனால்

🌿யாரிடமும் நான் எந்தவித சன்மானமும் பெறவில்லை”
கணவர் சொன்னது உட்பொருள் பொதித்த பதில். ஆனால் மிகவும் கோபமேற்பட்டது அவரின் மனைவிக்கு. சன்மானம், பொருள் என்பதெல்லாம் இப்பொழுது இரண்டாம் பட்சமாகிவிட, 'என்ன? ... என் கணவர்மேல் சந்தேகமா?' என்ற கோபம்.
“அது எப்படி? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - அவருக்குத் தங்கள்மேல் இருந்த நம்பிக்கை என்ன? முதல் கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு!

☘அவருக்குத் தங்கள்மேல் இருந்த நம்பிக்கை என்ன? உங்களை நடத்திய விதமென்ன? ஆனால் இப்பொழுது இந்த உமர்? இவர் மட்டும் உங்களுடன் கண்காணிப்பாளைரை அனுப்பினாரோ?” என்று கொதித்தார்!
அத்துடன் விடவில்லை, கலீஃபா உமருடைய இல்லத்திற்குக் கிளம்பிச் சென்று அவர் வீட்டுப் பெண்களிடம் இதை முறையிட்டார். உமருக்குச் செய்தி எட்டியது.

🌱கூப்பிட்டனுப்பினார் அந்தத் தோழரை.
“என்னய்யா இது புதுக் கதை? நான் என்றிலிருந்து உம்மைக் கண்காணிக்க ஆளனுப்பினேன்?”
“அமீருல் மூஃமினீன்! நீங்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை. நெடும் பயணத்திலிருந்து திரும்பிய நான் கூலியோ பரிசோ எதுவுமே கொண்டு வராததால் ஏமாற்றமடைந்த என் மனைவியைச் சமாளிக்க வேறுவழி தெரியவில்லை. அதனால்தான் அப்படிச் சொன்னேன்”
உளமாரச் சிரித்தார் உமர். சில பரிசுப் பொருட்களை அவருக்கு அளித்து,

🍃“இந்தாரும். இதை எடுத்துச் சென்று உம் மனைவிக்குப் பரிசளிக்கவும், மகிழ்விக்கவும்”
பெற்றுக் கொண்டு திரும்பினார் அந்தத் தோழர் - முஆத் பின் ஜபல். ரலியல்லாஹு அன்ஹு.

🌴அப்பயணத்தில் அவசியமின்றி எதுவும் பெற விழையாத முஆத், அதற்குமுன் வேறொரு சந்தர்ப்பத்தில் தனக்கான உரிமையை நிலைநாட்டிக் கொள்ள உமரிடம் வாக்குவாதம் புரிந்ததை இதனூடே பார்ப்போம். அதற்கு முன்,
பரவலாய்ப் பெரிதும் அறியப்பெற்ற இந்தத் தோழர் முஆத் பின் ஜபலைப் பற்றிய முன்னுரையைச் சற்றுப் பார்த்துவிடுவோம்.

🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬

🌟 *இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....�*


📝  *முஹம்மது ஃபாயஸ்*🏅

🌴 *கியாமத் நாளை நோக்கி* 🌴
பதிவு நாள்: 1 / 1 / 17

🔋🔮🔋🔮🔋🔮🔋🔮🔋🔮🔋


No comments:

Post a Comment