Wednesday, 14 March 2018

ஏப்ரல் - ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்க்கை தொடர்


ஸாலிஹ் நபியை அவரது சமுதாயம் பொய்பித்தது

ஸாலிஹ் நபியை அவரது சமுதாயம் பொய்யரெனத் தூற்றியது ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.

"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.

"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).

இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக அல்லாஹ் பின்வருமாறு பதிலளித்தான்.

"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.

அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக! (அல்குர்ஆன் 54:23-27)

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது

"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

"ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.

"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

"இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா? (அல்குர்ஆன்: 26:141-145)

அத்தாட்சியாக அனுப்பப்பட்ட ஒட்டகம்

ஸாலிஹ் (அலை) அவர்களைப் பொய்யரெனக் கருதியதோடு அவரைச் சூனியக்காரர் என்றும் வர்ணித்தார்கள். மேலும் ஸாலிஹ் நபி இறைதூதர் தாம் என்பதை நிரூபிக்க ஓர் அடையாளத்தைக் கொண்டு வருமாறு வேண்டினர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க அல்லாஹ் அற்புதமான ஓர் ஒட்டகத்தைச் சான்றாக அனுப்பினான்.

"நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்" (என்றனர்).

அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."
(அல்குர்ஆன்: 26:153,154)

இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்."

அவர்கள் அதன் கால் நரம்பதை; துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
 (அல்குர்ஆன்:26:155, 156)

ஆக, அல்லாஹுவால் ஸமூது சமுதயாத்திற்கு அத்தாட்சியாக வழங்கப்பட்ட ஒட்டகம் ஏனைய ஒட்டகங்களைவிட முற்றிலும் வேறுப்பட்டுதான் இருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் ஸமூது சமுதயாத்திற்கென்றுள்ள கிணற்றில் ஒரு நாள் அந்த சமுதாய மக்கள் நீர் பருக வேண்டும். மற்றொரு நாள் ஒரு சமுதாயம் அருந்தும் நீரை ஒரே ஓர் ஒட்டகம் அருந்தவேண்டுமென்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கின்றான் என்றால் அந்த ஒட்டகம் மிக மிக பிரம்மாண்டமானது என்பதையும் விளங்கி கொள்ள முடிகிறது. அதே சமயம் அந்த பிரம்மாண்டம் உடல் அமைப்பிலா? உருவத்திலா? என்று எந்த வித முடிவுக்கும் நம்மால் வர முடியாது.

ஸாலிஹ் நபியின் சமுதாயம் ஸாலிஹ் நபியை நபியென விசுவாசம் கொள்ள ஓர் அத்தாட்சியைக் கேட்டன. அதற்காக அல்லாஹ் ஒட்டகத்தை அத்தாட்சியாக அனுப்பினான். இதுவே திருமறை குறிப்பிடும் உண்மை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

No comments:

Post a Comment