Thursday, 13 July 2017

இயக்கமா ? இஸ்லாமா ? நீங்களே முடிவெடுங்கள்!

இயக்கமா ? இஸ்லாமா ?
நீங்களே முடிவெடுங்கள்!

துவங்கி விட்டது சகோதர யுத்தம்!

கொடிக்கும் பெயருக்கும்
கோர்ட்டில் வழக்கு!

பரஸ்பரம் குற்றச்சாட்டு !

பொதுகூட்ட எதிர்ப்பு !
போஸ்டர் கிழிப்பு  !

 முகநூலில் முகம்சுழிக்க
வைக்கும் பதிவுகள்!

சமூக வலைத்தளங்களில்
சகிப்பின்மை  பதிவுகள் !

 ஒருவருக்கொருவர்
முனாஃ பிக்  ஃ பத்வா !

நேற்றுவரை தியாகி
இன்று துரோகி!

நேற்றுவரை நேர்மையாளர்
இன்று நேர்மையற்றவர் !

மாட்டுக் கறி உரிமைக்காக
போராட வேண்டிய நாம்
ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி
மனிதக்கறி தின்னலாமா ?

சங் பரிவாருக்கு எதிராக
பயன்படவேண்டிய சக்தியை
சகோதரச் சண்டையில்
நாம் வீணாக்கலாமா ?

சமுதாயத்தின் உரிமைகளுக்காக
நீதிமன்றம் செல்லவேண்டிய நாம்
சகோதர சண்டைகளுக்காக
நீதிமன்றம் செல்லலாமா ?

சூழ்ந்து நிற்கும் அபாயத்தை
சேர்ந்து நின்று எதிர்க்க வேண்டிய
நாம் பிரிந்து நின்று போரிடலாமா ?

இஸ்லாத்துக்கு வக்கீலாக இருந்து
வாதிடுவதை விட்டு
இயக்கத்துக்கு வக்கீல்களாக
நின்று வாதிடலாமா ?

நேற்றுவரை எதிரிகளாக
இருந்தவர்களை
சகோதரர்களாக்கியது  இஸ்லாம்  !

நேற்றுவரை சகோதரர்களாக
இருந்தவர்களை
எதிரிகளாக்கியது இயக்கம் !

இஸ்லாமிய நெறிகளை  விட
இயக்க வெறி மிகைக்க வேண்டாம் !

இது பட்டுத் திருந்தியவனின்
பணிவான வேண்டுகோள் !
விட்டுக் கொடுங்கள் ! அல்லது
விட்டு விலகுங்கள் !
முட்டிக் கொள்வதில்
எந்த நன்மையையும் இல்லை !

இறைவன் கொடுக்க நினைப்பதை
யாரும் தடுக்க முடியாது !

இறைவன் தடுக்க நினைப்பதை
யாரும் கொடுக்க முடியாது!

இயக்கமா ? இஸ்லாமா ?
நீங்களே முடிவெடுங்கள்!

 நிதானமாக சிந்திப்போம்! நாளை
நிச்சயம் இறைவனை  சந்திப்போம்!

No comments:

Post a Comment