Monday, 17 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் - 1

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள் -1 


========================

எப்படி எந்த நோக்கத்திற்காக ஹஜ்
துவங்கிற்று என்பதை இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
காலச்சூழ்நிலைகள் அறிவது அவசியம். இப்ராஹீம் عليه السلام
அவர்களின் மகனார் இஸ்மாயீல் عليه السلام
 அவர்களுக்குப்பிறகு
அவர்களின் வழித்தோன்றல்கள்
மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என
இறைவன்தான் அறிவான்!
எப்படியோ சில
நூற்றாண்டுகளில் இந்த மக்கள்
வழிகேட்டில் புகுந்துவிட்டனர்.
ஒரே இறவனை வணங்குவதற்கும்
அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை
ஆலயத்தில் நூற்றுக்கணக்கில்
சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.

 ﻟًﺒّﻴْﻚَ ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻟَﺒَّﻴْﻚَ ، ﻟَﺒَّﻴْﻚَ ﻻ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻚَ ﻟَﺒَّﻴْﻚَ، ﺍِﻥَّ ﺍﻟْﺤَﻤْﺪَ ﻭَﺍﻟﻨِّﻌْﻤَﺔَ ﻟَﻚَ ﻭَﺍﻟْﻤُﻠْﻚَ ﻻﺷَﺮِﻳْﻚَ ﻟَﻚ

“நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன்.
உனக்கு இணை துணை கிடையாது. நான்
வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ்
அனைத்தும் உனக்கே
உரித்தானவை. அருட்கொடைகள்
அனைத்தும் உன்னுடையவை.
எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”
இதில் விசித்திரம்
என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம்
வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி
ஆகியோருக்கும் சிலைகள்
தயாரிக்கப்பட்டு விட்டன.
நேர்வழியில் நின்ற இப்ராஹீம்
நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’
‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’
இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள்.

செவ்வாய், புதன், வெள்ளி, சனி
இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள்
வணங்கினார்கள் என்றும்
தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன
தங்களுடைய பெரியார்கள்
ஆகியோரையும் அவர்கள்
வணங்கினார்கள். அறியாமை இந்த
அளவுக்கு முற்றிப்
போயிருந்தது.
அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில்
வணங்குவதற்கு தெய்வச் சிலை
இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து
விடுவார்கள். கல்லும்
கிடைக்கவில்லை என்றால்
மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.

*ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்!*

அந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின்
கதி எப்படி இருந்தது என்பத
எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு
ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம்
இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம்
போடுவார்கள். அவரவர்கள்
தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும்
தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில்
மற்றவர்களை முந்துவார்கள்.
இறுதியில் அவர்கள்
ஒருவரையொருவர்
இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.
அப்புறம் எவர் தர்மப்பிரபு எவர்
கொடைவள்ளல் என்கிற போட்டி
நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற
சமையலில் பெரிய பெரிய
அண்டாக்களையும்
குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில்
ஏற்றுவார்கள். ஒருவரையொருவர்
மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு
மேல் ஒட்டகத்தை
அறுத்துக்கொண்டே போவார்கள்.
இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு
உணவளித்தார் என்று பிரசாரம் ஆக வேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை
படுமோசமான செயல்கள்
அனைத்தும் தாராளமாக நடந்து
கொண்டிருந்தன.
நிர்வாணமாக வலம் வருதல் காபாவை சுற்றி வலம்
வருதலும் நடந்துகொண்டுதான்
இிருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக்
கொண்டிருந்தார்கள்? எங்கள் அன்னையர் எங்களை எந்த
நிலையில்
பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன்
முன் செல்வோம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச்
செய்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் எப்படியென்றால்
பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்லாம்
தடவுவார்கள். மாமிசத்தை
வாசலில் பரப்புவார்கள்.  இந்த
இரத்தமும் மாமிசமும்
இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!

இப்ராஹீம் நபியவர்கள் ஹஜ்ஜின்
நான்கு மாதங்களை
தடுக்கப்பட்டவை என்றும், இந்த
மாதங்களில் எந்த விதமான
சண்டையும் வம்பும்
நடத்தக்கூடாது என்றும்
அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த மக்கள் ஏதோ அந்த மாதங்களின்
கண்ணியத்தை சிறிதளவு மனத்தில்
வைத்திருந்தார்கள். ஆனால் மனம்
சண்டையிட விரும்பினால்
துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை
வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை
அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து
கொள்வார்கள். அத்துடன் தமது
மார்க்கத்தில் நல்லெண்ணம்
கொண்டிருந்த அவர்களில் ஒரு
சிலரும் தமது அறியாமையின்
காரணத்தினால் நூதனமான புதிய
முறைகளை உருவாக்கிக்
கொண்டிருந்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்... 

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 18-07-2017

No comments:

Post a Comment