நோன்பு - 16
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*பத்ரு களம்!*
========================
ஷுஹதாக்களின் மத்துவம்
‘அல்லாஹ்வுடைய பாதையில்
வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை
இறந்தவர்கள் என எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில்
உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக்
கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன்)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்
மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம்
கேட்ட போது நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அறிவித்ததாக கீழ்காணும்
ஹதீதை குறிப்பிட்டார்கள்:
‘ஷுஹதாக்களுடைய உயிர்களானது
சுவர்க்கத்தில் உள்ள பச்சை நிற
பறவையின் வயிற்றில் வைக்கப்பட்டு,
சுவர்க்கத்தில் நினைத்த இடங்களை
சுற்றி வரும். பிறகு இறைவனின்
சிம்மாசனத்தில் தொங்க விடப்பட்ட தங்கக் கூண்டில் தஞ்சமடையும் என்று
கூறினார்கள். இத்தகைய மாபெரும்
பாக்கியம் பத்ரு ஸஹாபாக்களுக்கும்
கிடைத்தது.
நூல்: புகாரி, முஸ்லிம்.
மேலும் ஷுஹதாக்களைப் பற்றி நபிகளார், ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களை கொண்டு கண்ணியம் செய்திருக்கிறான்.
அதுபோன்ற சிறப்பை நான் உட்பட எந்த
நபிமாரும் பெறவில்லை. அவையாவன:
1.எல்லா நபிமார்களின் உயிர்களையும்
மௌத்தின் அதிபதி இஸ்ராயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான்
கைப்பற்றுவார்கள். ஆனால்
ஷுஹதாக்களின் உயிர்களை
அல்லாஹ்வே கைப்பற்றுவான்.
2.அனைத்து நபிமார்களும்
மரணமானபின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும்
குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள்
குளிப்பாட்டப்பட மாட்டார்கள்.
வெட்டுண்ட காயங்களுடன்
அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர்
பக்கம் அவர்கள் தேவையாக மாட்டார்கள்.
3. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு
கஃபனிடப்படுவார்கள். நானும்
கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள்.
அவர்கள் போரில் அணிந்திருந்த
உடைகளுடனே அடக்கம்
செய்யப்படுவார்கள்.
4. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு
அவர்களை மரணித்தவர்கள் என்று
கூறப்படும். நானும் முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று
கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள்
மரணித்து விட்டால் அவர்களை
மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள்
என்று ஒரு திருமறை வசனத்திலும்,
மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள் என்று
மேற்கூறிய வசனத்திலும் இறைவனே
கூறுகிறான்.
5. எல்லா நபிமார்களுக்கும்
மறுமைநாளில் சிபாரிசு செய்யும்
உரிமை வழங்கப்படும். ஆனால்
ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும்
சிபாரிசு செய்து கொண்டு
இருக்கிறார்கள் என நபி நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். –நூல்: தப்ஸீர்
குர்துபி 1518ஃ3
சிறிது நேரம் இறைவன் பாதையில்
சண்டை செய்வது 50 தடவை நபிலான
ஹஜ்ஜு செய்வதை விட சிறந்தது. –
அல்ஹதீது.
*பத்ரின் முதல் வீர தியாகி!*
பத்ரு போரில் முதன் முதலாக
ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாகும்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி
கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில்
நான்கு கறுப்பு நிற மனிதர்கள்
சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள்.
1.எத்தியோப்பியா நாட்டு அதிபரான
கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி
2.லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம்.
3. பிலால் ரலியல்லாஹு அன்ஹு
4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான
மிஹ்ஜஹ் ரலியல்லாஹு அன்ஹு
ஆகியோர் எனக் கூறினார்கள். – நூல்:
தப்ஸீர் இப்னு கதீர்.
*உரிமைப் பிரச்சினை!*
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் பத்ரு போருக்கு தயாரான
போது கைஃஸமா ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் தன்னுடைய மகனான
ஸஃது இப்னு கைஃஸமா ரலியல்லாஹு
அன்ஹு அவர்களிடம் ‘மகனே! நீ உம்
மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான்
போரிடப் போகிறேன்’ என
வேண்டினார்கள். அதற்கு ஸஃதிப்னு
கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே! இது சுகப்
பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை.
சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக
இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக்
கொடுத்திருப்பேன். இது
சொர்க்கத்தையே கூலியாக பெறும்
போராகும். இதில் யாருக்கும் விட்டு
கொடுக்க மாட்டேன் என்று கூறி
குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து
விட்டார்கள்.
அதன்பிறகு இருவரில் யார் போருக்கு
செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரே வந்தது. இவர்கள் பத்ருப் போருக்காக நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுடன்
புறப்பட்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து
சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை
இறைவன் அவர்களுக்கு வழங்கினான். அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு
ஷஹீதானார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 13-06-2017.
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*பத்ரு களம்!*
========================
ஷுஹதாக்களின் மத்துவம்
‘அல்லாஹ்வுடைய பாதையில்
வெட்டுப்பட்டு ஷஹீதானவர்களை
இறந்தவர்கள் என எண்ணாதீர்கள். அவர்கள் தங்களின் இறைவனின் சன்னிதானத்தில்
உயிருள்ளவர்களாவும், உணவளிக்கக்
கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன்)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்
ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்
மேற்கூறிய வசனம் குறித்து விளக்கம்
கேட்ட போது நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அறிவித்ததாக கீழ்காணும்
ஹதீதை குறிப்பிட்டார்கள்:
‘ஷுஹதாக்களுடைய உயிர்களானது
சுவர்க்கத்தில் உள்ள பச்சை நிற
பறவையின் வயிற்றில் வைக்கப்பட்டு,
சுவர்க்கத்தில் நினைத்த இடங்களை
சுற்றி வரும். பிறகு இறைவனின்
சிம்மாசனத்தில் தொங்க விடப்பட்ட தங்கக் கூண்டில் தஞ்சமடையும் என்று
கூறினார்கள். இத்தகைய மாபெரும்
பாக்கியம் பத்ரு ஸஹாபாக்களுக்கும்
கிடைத்தது.
நூல்: புகாரி, முஸ்லிம்.
மேலும் ஷுஹதாக்களைப் பற்றி நபிகளார், ஷுஹதாக்களை இறைவன் ஐந்து சிறப்புக்களை கொண்டு கண்ணியம் செய்திருக்கிறான்.
அதுபோன்ற சிறப்பை நான் உட்பட எந்த
நபிமாரும் பெறவில்லை. அவையாவன:
1.எல்லா நபிமார்களின் உயிர்களையும்
மௌத்தின் அதிபதி இஸ்ராயீல்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தான்
கைப்பற்றுவார்கள். ஆனால்
ஷுஹதாக்களின் உயிர்களை
அல்லாஹ்வே கைப்பற்றுவான்.
2.அனைத்து நபிமார்களும்
மரணமானபின் குளிப்பாட்டப்படுவார்கள். அவ்வாறே நானும்
குளிப்பாட்டப்படுவேன். ஷுஹதாக்கள்
குளிப்பாட்டப்பட மாட்டார்கள்.
வெட்டுண்ட காயங்களுடன்
அடக்கப்படுவார்கள். இந்த உலகின் தண்ணீர்
பக்கம் அவர்கள் தேவையாக மாட்டார்கள்.
3. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு
கஃபனிடப்படுவார்கள். நானும்
கஃபனிடப்படுவேன். ஆனால் ஷுஹதாக்கள் கஃபனிடப்பட மாட்டார்கள்.
அவர்கள் போரில் அணிந்திருந்த
உடைகளுடனே அடக்கம்
செய்யப்படுவார்கள்.
4. எல்லா நபிமார்களும் மரணித்த பின்பு
அவர்களை மரணித்தவர்கள் என்று
கூறப்படும். நானும் முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று
கூறப்படும். ஆனால் ஷுஹதாக்கள்
மரணித்து விட்டால் அவர்களை
மரணித்தவர்கள் என்று சொல்லாதீர்கள்
என்று ஒரு திருமறை வசனத்திலும்,
மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள் என்று
மேற்கூறிய வசனத்திலும் இறைவனே
கூறுகிறான்.
5. எல்லா நபிமார்களுக்கும்
மறுமைநாளில் சிபாரிசு செய்யும்
உரிமை வழங்கப்படும். ஆனால்
ஷுஹதாக்கள் ஒவ்வொரு நாளும்
சிபாரிசு செய்து கொண்டு
இருக்கிறார்கள் என நபி நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள். –நூல்: தப்ஸீர்
குர்துபி 1518ஃ3
சிறிது நேரம் இறைவன் பாதையில்
சண்டை செய்வது 50 தடவை நபிலான
ஹஜ்ஜு செய்வதை விட சிறந்தது. –
அல்ஹதீது.
*பத்ரின் முதல் வீர தியாகி!*
பத்ரு போரில் முதன் முதலாக
ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாகும்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி
கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில்
நான்கு கறுப்பு நிற மனிதர்கள்
சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள்.
1.எத்தியோப்பியா நாட்டு அதிபரான
கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி
2.லுக்மானுல் ஹகீம் அலைஹிஸ்ஸலாம்.
3. பிலால் ரலியல்லாஹு அன்ஹு
4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான
மிஹ்ஜஹ் ரலியல்லாஹு அன்ஹு
ஆகியோர் எனக் கூறினார்கள். – நூல்:
தப்ஸீர் இப்னு கதீர்.
*உரிமைப் பிரச்சினை!*
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் பத்ரு போருக்கு தயாரான
போது கைஃஸமா ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் தன்னுடைய மகனான
ஸஃது இப்னு கைஃஸமா ரலியல்லாஹு
அன்ஹு அவர்களிடம் ‘மகனே! நீ உம்
மனைவி மக்களுடன் தங்கிவிடு. நான்
போரிடப் போகிறேன்’ என
வேண்டினார்கள். அதற்கு ஸஃதிப்னு
கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தந்தையைப் பார்த்து என் அருமை தந்தையே! இது சுகப்
பிரச்சனை அல்ல. சொர்க்கப் பிரச்சனை.
சொர்க்கம் அல்லாத வேறு விஷயமாக
இருப்பின் உங்களுக்காக நான் விட்டுக்
கொடுத்திருப்பேன். இது
சொர்க்கத்தையே கூலியாக பெறும்
போராகும். இதில் யாருக்கும் விட்டு
கொடுக்க மாட்டேன் என்று கூறி
குடும்பத்துடன் தங்குவதற்கு மறுத்து
விட்டார்கள்.
அதன்பிறகு இருவரில் யார் போருக்கு
செல்வது என்பதில் கடும் போட்டி ஏற்பட்ட போது சீட்டுக் குலுக்கி போட்டார்கள். அதில் ஸஃதிப்னு கைஃஸமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரே வந்தது. இவர்கள் பத்ருப் போருக்காக நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுடன்
புறப்பட்டார்கள். இவர்கள் ஆசைப்பட்டது போல் உயிர்த்தியாகம் செய்து
சொர்க்கத்தை அடையும் நற்பேற்றினை
இறைவன் அவர்களுக்கு வழங்கினான். அவர்கள் அம்ரிப்னு அப்து உத்து என்ற எதிரியால் வெட்டப்பட்டு
ஷஹீதானார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 13-06-2017.

No comments:
Post a Comment