Sunday, 7 May 2017

இந்திய பிரிவினைவாதத்திற்கு யார் காரணம் தொடர் - 2

ஆட்சியாளர்கள் செய்த திட்டமிட்ட சதியின் விளைவாக இந்துக்களின் மீது முஸ்லிம்களுக்கு ஒரு வகையான பொறாமையும் முஸ்லிம்களை விட தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்றும் மனோ பாவம் இந்துக்களுக்கும் வளர ஆரம்பித்தன.

சிப்பாய் கலகத்திற்குப் பின்

    இந்நிலையில், 1857 ஆம் வருடத்தில் பசுமாட்டின் கொழும்பினால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் காரணம் காட்டி இந்து சிப்பாய்களால் சிப்பாய் கலகம் துவக்கப்பட்டது. அதில் முஸ்லிம்களும் பூரணமாகக் கலந்துக் கொண்டனர். அக்கலம் சில மாதங்களிலேயே ஒடுக்கப்பட்டு விட்டது. இந்துக்களில் சிலர் தங்களுடன் தோளோடு தோள் சேர்த்து ஆயுதத் தாங்கிப் போரிட்ட முஸ்லிம்களுக்குத் துரோகிகளாக மாறி அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தனர். இதனால் அரசாங்கத்தின் கோபமெல்லாம் முஸ்லிம்களின் மீது விழுந்தது.

    சிப்பாய்க் கலகத்திற்குப் பின் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற கொடுமைகளை நேரில் கண்டனர். ஸையித் அஹ்மது கான், 1887 ஆம் ஆண்டு, காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமைத் தாங்கி பம்பாய் பாரிஸ்டர் ஜனாப் பக்ருத்தீன் தையிப்ஜீக்கு எழுதிய கடிதத்தில்,

    “சிப்பாய் கலகத்தின் போது என்ன நடந்தது? இந்துக்கள் அதனை ஆரம்பித்தனர். முஸ்லிம்கள் அதிக தைரியத்துடன் அதில் ஈடுபட்டனர். இறுதியில் இந்துக்கள், கங்கையில் மூழ்கித் தங்களின் பாவங்களைப் போக்கிக் கொண்டு முன் போல் நல்ல பிள்ளைகளாகிவிட்டனர். ஆனால், ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் நசிந்து நாசமடைந்தன” என குறிப்பிட்டுள்ளார்.     (பாகிஸ்தான் விளக்கம் : By எப். கே. துர்ரானி)

    சொல்லவொணா துன்பங்களை அனுபவித்த முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் பல நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்து தீவிரவாதிகளின் போக்கு :

    1867-ல் காசியிலுள்ள இந்துத் தலைவர்கள் உருது மொழிக் கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1875-ல் “இந்தியா இந்துக்களுக்கே” என்ற கோஷத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆர்யசமாஜ் என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் இஸ்லாத்தையும் கிறிஸ்துவ மதத்தையும் எதிர்ப்பதே.

    1890-ல் “முஸ்லிம்கள் அந்நியர்கள்” எனக் கூறிக் கொண்டிருந்த பாலகங்காதர திலகர், முஸ்லிம்கள் குர்பானிக் கொடுப்பதை எதிர்த்து பசு பாதுகாப்பு இயக்கத்தைத் துவக்கினர்.

    1882-ல் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, ஆனந்த மடம்’ எனும் பெயரில் ஒரு நாவல் வெளியிட்டார். அதில் தான் வந்தேமாதரம் என்ற கீதம் வருகிறது. அதில் இந்தியாவை “காளி” என்ற கடவுளுக்கு ஒப்பிட்டு, அந்த காளி துஷ்டர்களை ஒழிக்கச் சொல்லுகிறாள் எனும் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் முஸ்லிம்களுக்கு எதிராக தனது துவேஷத்தை வெளிப்படுத்தியது.

    இவையெல்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒருவகையான பயஉணர்ச்சியை ஏற்ப்படுத்தின. அது பின்னாளில் இரு சாரரிடையே நிரந்தரப் பகையாக மாறியது.

காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும்

     இந்நிலையில், 1885ல் தேசிய காங்கிரஸ் தோன்றியது. அதன் முன்னோடித் தலைவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் எதிர்ப்பாளர்களே, அவர்கள் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆங்கிலேயர்கள் தூவிய வேற்றுமை விஷ வித்துக்களுக்கு பலியான இந்து மதத் தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தை இந்து மறுமலர்ச்சி எனும் அடிப்படையில் நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்கு பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை நடத்த விரும்பினர். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதிலாக அவர்களை ஒதுக்கிவிட்டு தங்களின் சுதந்திரப் போராட்டத்தை  நடத்த விரும்பினர். விளைவு? 1906ஆம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக் சர். ஆகாகான் அவர்கள் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.

    முஸ்லிம் லீக் ஏன் தோற்றுவிக்கப்பட்டது? என்பதன் காரணத்தை R.P. Dutt இப்படிக் குறிப்பிடுகிறார்:

    “தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படையில் நடத்த விரும்பினர். இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர். எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து விடாமல் இருக்க முயற்ச்சித்தனர். அதன் விளைவே 1906 முஸ்லீம் லீக் தோன்றியது.”

    (Quoted in R. At Desai’s Social Background of Indian Nationalism)

    Most members of the congress made a serious error refusing to admit the exitence and validity of muslim nationalism.

    முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும். நிலைப்பாட்டையும் மறுத்ததின் மூலம் பெறும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமானத் தவறினை செய்தனர்.

    (A Short History of india and pakistan by T. Walter wall Bank) (U.S.A.) 1965.

    முஸ்லிம் லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காரணத்தை R.P. Dutt இப்படிக் குறிப்பிடுகிறார்:

    “தீவிரவாத தேசிய இந்துத் தலைவர்கள் தங்களின் போராட்டத்தை இந்துமத அடிப்படையில் நடத்த விரும்பினர். இந்துமத மறுமலர்ச்சி மூலமே தேசிய விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தப்பட்டதாகக் காட்ட விரும்பினர். எனவே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து விடாமல் இருக்க முயற்ச்சித்தனர். அதன் விளைவே 1906 முஸ்லீம் லீக் தோன்றியது.”

    (Quoted in R. At Desai’s Social Background of Indian Nationalism)

    Most members of the congress made a serious error refusing to admit the exitence and validity of muslim nationalism.

    முஸ்லிம்களின் தேசிய உணர்வுகளின் அவசியத்தையும். நிலைப்பாட்டையும் மறுத்ததின் மூலம் பெறும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் மோசமானத் தவறினை செய்தனர்.

    (A Short History of india and pakistan by T. Walter wall Bank) (U.S.A.) 1965.

முஸ்லிம் லீக் தோன்றினாலும் முஸ்லிம்களில் பலர் காங்கிரஸிலும், லீக்கிலும் இருந்தனர். மேளலானா அலி சகோதரர்கள் காங்கிரஸை பெரிதும் நம்பினர்.

    பிரிவினை பிரச்சாரம் யார் துவக்கியது?

     இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கும் 1940க்கும் இடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு எனும் திட்டத்தை முதன் முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள் தாம்.

    இன்று இந்திய பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கும் 1940க்குமிடையே நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் ஒரு முறை ஆராய்ந்து பார்க்கட்டும்.

    இந்நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள்; அல்லது இங்கு இரண்டாம் தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாக போடப்பட்டது.

    “முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் தனித்தனி நாடு எனும் சிந்தனை லாலா லஜ்பத்ராயின் மூளையில் தான் முதன்முதலில் உதித்தது” என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்க செயலாளராக இருந்துவரும் காந்திஜியின் நெருங்கிய சகாவுமான பண்டிட்சுந்தர்லால், “ரேடியன்ஸ்” வார இதழில் (13-6-87) ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

    இன்று R.S.S போற்றிப் புகழும் V.D சாவர்க்கார், இந்துக்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக R.N. அகர்வால் தனது the national movement என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

    குர்தகி மட சங்கராச்சாரியார், “இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது. முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே. அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்துக் கொள்ள வேண்டும். என்று முஸ்லிம்களை எச்சரித்தனர்.

    அகில இந்திய சிவில் சர்வீசில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu – Muslim state is sheer nonsense “இந்து – முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது ஒரு முட்டாள்தனம்” என உரத்துச் சொன்னார்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)......

பதிவு நாள்: 07-05-2017

No comments:

Post a Comment