Saturday, 6 May 2017

*சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு தொடர் - 1

*சுன்னாவை பாதுகாப்பதில்   சஹாபாக்களின் பங்கு*

*PART 1*

*வஹி மூலம் அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த போது அதனை எழுதிப் பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்திய நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஹதீஸை எழுதி வைத்துக் கொள்ள ஆர்வமூட்ட வில்லை.*

 *குர்ஆனும் ஹதீஸும் இரண்டறக் கலந்து விடுமோ என்ற அச்சமே அதற்கு காரணமாகும். எனினும் சில நபித் தோழர்கள் ஹதீஸ்களை எழுதக் கேட்ட போதும் எழுதி பாதுகாத்து வைத்துக் கொண்ட போதும் அதனை நபியவர்கள் தடுக்க வுமில்லை.*

*நபித்தோழர்களில் என்னை விட அதிகமாக ஹதீஸ்களை அறிந்தவர் எவருமில்லை. எனினும் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளக்கூடியவ ராக இருந்தார். நான் எழுதிக் கொள்ள மாட்டேன் (மனனமிட்டுக் கொள்வேன்). (நூல்: புகாரி-113)*

*ஹதீஸ்களை எழுதி வைத்துக்கொள்ள நான் நபி (ஸல்) அவர் களிடம் அனுமதி கேட்டபோது எனக்கு அனுமதி தந்தார்கள் என அபூ ஹூரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: பத்ஹூல் பாரி)*

*நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்கக் கூடிய ஒவ்வொன்றையும் நான் எழுதக் கூடியவனாக இருந்தேன். நீ எழுதிக் கொள். என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக என் வாயிலிருந்து சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் வெளியாவதில்லை” என நபி(ஸல்) கூறினார் கள்.  (அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அம்ரு (ரலி), நூல்: பத்ஹூல் பாரி)*

*மஹ்மூத் பின் ரபீஆ (ரலி) அறிவிக்கிறார்கள்: நான் மதீனாவுக் குச் சென்று இத்பான் இப்னு மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து தங்களைப் பற்றி ஒரு செய்தி எனக்கு எட்டியது. (அது பற்றி கூறுங்கள்) என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் என் பார்வையில் ஏதோ ஏற்பட்டு (பார்வை தொலைந்து) விட்டது. ஆகவே நான் அல்லாஹ்வின் தூதரிடம் ஆளனுப்பி நீங்கள் வந்து என் வீட்டில் தொழ வேண்டும் அதை நான் தொழுமிடமாக எடுத்துக் கொள்வேன் என்று சொல்லியனுப்பினேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நபித் தோழர்கள் (நயவஞ்சகர்களைப் பற்றி) அவர்களுக்கிடையில் பேசிக் கொண்டி ருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷம் (ரலி) அவர்களுக்குப் பெறும் பங்கிருப்ப தாக கூறினார்கள். அவருக்கெதிராக நபியவர் கள் பிரார்த்தித்து அவர் அழிந்து போக வேண்டும் என்றும் அவருக்கு தீங்கு ஏதும் நேர வேண்டும் என்றும் விரும்பினார்கள்.*

*நபி(ஸல்) அவர்கள் தொழுது முடிந்ததும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் சாட்சி கூறவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் அவர் அவ்வாறு கூறுகிறார் எனினும் அது அவருடைய உள்ளத்தில் இல்லை என்று கூறினார்கள்.*

*அப்போது நபியவர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்றும் சாட்சியம் கூறும் ஒருவர் நரகில் நுழைய மாட்டார் அல்லது நரகம் அவரை தீண்ட மாட்டாது என்று கூறினார்கள்.*

*இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறும் போது இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே நான் என் புதல்வரிடம் இதை எழுதி வைத்துக் கொள்” என்றேன். அவரும் எழுதிக் கொண்டார் என்றார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 54)*

*அலி (ரலி) அவர்கள் சுட்ட செங்கற்கலால் கட்டிய ஒரு மேடை (மிம்பர்) மீது நின்று எங்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் வாள் ஒன்றை வைத்திருந்தார்கள். அதில் ஓர் ஏடு தொங்கவிடப் பட்டிருந்தது. அவர்கள் (தமது உரையில்) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வுடைய வேதத்தையும் இந்த ஏட்டையும் தவிர ஓதப்படுகின்ற நூல் எதுவும் எங்களிடம் இல்லை என்று கூறிவிட்டு அதை விரித்துக் காட்டினார்கள். அதில் (உயிரீட்டுத் தொகையாக அபராதம் செலுத்தப் பட வேண்டிய) ஒட்டகங்களின் வயது விவரங்கள் இருந்தன.*

*மேலும் அதில் பின்வருமாறு எழுதப் பட்டிருந்தது. மதீனா நகர் “அய்ர்” எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்து கின்றானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும் அவன் புரிந்த கடமையான வழிப்பாட்டையும் கூடுதலான (நfபிலான) வழிப்பாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான்.*

*முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றே (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைகலத்திற்குச் அது சமமானதாக) ஆகும். அவர்களில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் கூட அடைக் கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் அளித்த அடைக் கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ் வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவருடைய சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான (நபிலான) வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான்.*

*இன்ஷா அல்லாஹ் தொடரும்....*

No comments:

Post a Comment