பூமியில் இரண்டாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசல்
3366- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الأَعْمَشُ حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ قَالَ: ((الْمَسْجِدُ الْحَرَامُ)). قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ: ((الْمَسْجِدُ الأَقْصَى)). قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ: ((أَرْبَعُونَ سَنَةً، ثُمَّ أَيْنَمَا أَدْرَكَتْكَ الصَّلاَةُ بَعْدُ فَصَلِّهْ، فَإِنَّ الْفَضْلَ فِيهِ)).
3366. அபூ தர்(ரலி) அறிவித்தார் நான் (நபி(ஸல்) அவர்களிடம்),“இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?“ என்று கேட்டேன். அவர்கள்,“அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான்,“பிறகு எது?“ என்று கேட்டேன். அவர்கள்,“ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான்,“அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள்,“நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,“நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.
நன்மை அதிகம்
********************
) وعن أبي الدرداء وجابر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «فضل الصلاة في المسجد الحرام على غيره مائة ألف صلاة، وفي مسجدي هذا ألف صلاة وفي مسجد بيت المقدس خمسمائة صلاة» أخرجه البيهقي في السنن الصغرى رقم (1821) وصححه الألباني في صحيح الجامع (4211).
மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவதற்கு ஒரு லட்சம் நன்மைகளும் .மஸ்ஜிது நபவியில் தொழுவதற்கு ஆயிரம் மடங்கு நன்மைகளும். பைத்துல் முகத்தஸில் தொழுவதற்கு 500 மடங்கு நன்மைகளும் கிடைக்கும் என்று நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தஜ்ஜால் நுழைய மாட்டான்
****-****************************
عن جنادة بن أبي أمية الأزدي قال: "ذهبت أنا ورجل من الأنصار إلى رجل من أصحاب النبي صلى الله عليه وسلم فقلنا حدثنا ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يذكر في الدجال، فذكر الحديث وفيه "علامته يمكث في الأرض أربعين صباحا، يبلغ سلطانه كل منهل، لا يأتي أربعة مساجد: الكعبة ومسجد الرسول، والمسجد الأقصى والطور" رواه أحمد .கியாமத்நாள் சமீபமாக தஜ்ஜால் வருவான் பூமியில் நாற்பதுநாள் தங்குவான் அனைத்து இடங்களுக்கும் செல்வான் ஆனால் நான்கு இடங்களுக்கு அவன் வரமாட்டான்.1 கஃபா. 2மஸ்ஜிதுன் நபவி 3 மஸ்ஜிதுல் அக்ஸா 4 தூர்சினா மலை என்று நபி ( ஸல்) கூறினார்கள். நூல் அஹ்மத்
ஃபலஸ்தீன முஸ்லிம்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு
***************************************
* طائفة من أهلها على الحق ظاهرين إلى قيام الساعة
لما روى أبو أمامة الباهلي, قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين، لا يضرهم من خالفهم.. قالوا: فأين هم؟ قال: ببيت المقدس وأكناف بيت المقدس" (رواه أحمد ).இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”என்னுடைய உம்மத்தில் ஒரு குழுவினர் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், இன்னும் (இறுதி) நேரம் வரும் நேரத்தில் அவர்கள் தங்களது எதிரிகளை வென்றெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.” அப்பொழுது ஒருவர் கேட்டார் : இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., அவர்களை நாங்கள் எங்கே காண்பது? அதற்கு, ”அவர்கள் பைத்துல் முத்திஸிலும், அதனைச் சுற்றிலும் (வாழ்ந்து கொண்டு) இருப்பார்கள்” என்றார்கள். (அஹ்மத்)
* حرص الأنبياء والصالحين على زيارة المسجد الأقصى
والصلاة فيه والسكن في بيت المقدس ومجاورة الأقصى, فقد زار بيت المقدس عمر بن الخطاب وأبو عبيدة وسعيد بن زيد وأم المؤمنين صفية وأبو الدرداء وسلمان الفارسي وعمرو بن العاص رضي الله عن الجميع
நபிமார்கள் நல்லடியார்கலெல்லாம் மஸ்ஜிதுல் அக்ஸாவை ஜியாரத் செய்ய வேண்டும் அதில் தொழ வேண்டும் அங்கு தங்க வேண்டும் என்றே விரும்பினார்கள்.
உமர் ( ரலி) அபூ உபைதா ( ரலி) சயீத் இப்னு ஜைத் ரலி ஸஃபிய்யா ரலி அபூதர்தாஉ ரலி சல்மான் பாரிஸ் ரலி அம்ருப்னுல் ஆஸ் ரலி ஆகிய சகாபாக்கல்அதை ஜியாரத் செய்துள்ளார்கள்.
எனவே வாழ்க்கையில் ஒருமுறையேனும் நாமும் இப்பள்ளிக்கு சென்று வருவோம்
عن أبي سعيد الخدري -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام، ومسجدي هذا، والمسجد الأقصى متفق عليه1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: “மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரீ.
No comments:
Post a Comment