Monday, 13 March 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻


🕋இன்றைய குர்ஆன் வசனம்:
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 29:69)

இன்றைய ஹதீஸ்:

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகிறவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்' என்று பதிலளித்தார்கள்.

பதிவு நாள்: *14-03-2017*

No comments:

Post a Comment