*கண்மணி நாயகம் அவர்கள் தம் வாழ்நாளில் மேற்கொண்ட மருத்துவ முறைகள் அடங்கிய*
*நபி வழி மருத்துவம் குறித்த ஹதீஸ் தொகுப்பு:*
⚙இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5678.
*🍱பேரீச்சம் பழம்*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5445.
💦ஜபலா இப்னு சுஹைம்(ரஹ்) கூறினார்
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், '(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று சொல்வார்கள். பிறகு, 'ஒருவர் தம் சகோதரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தாலே தவிர' என்று சொல்வார்கள்.
'அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்' என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) கூறினார்.
ஸஹீஹ் புகாரி 5446.
🌽அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்.
ஸஹீஹ் புகாரி 5447.
*🍯தேன்*
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி 5680.
🍒ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி 5682.
🍑அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி(ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் சென்தேன். (ஆனால், குணமாகவில்லை)' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார். ஸஹீஹ் புகாரி 5684.
*🥓கருஞ்சீரகம்*
காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். ஸஹீஹ் புகாரி 5687
🥒அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
*🍚தல்பீனா (பால் பாயசம்)*
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்
(என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'தல்பீனா நோயாளியின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்பார்கள்.
ஸஹீஹ் புகாரி 5689.
🍮உர்வா(ரஹ்) கூறினார்
ஆயிஷா(ரலி), தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், 'அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது' என்று சொல்வார்கள்.ஸஹீஹ் புகாரி 5690.
🍢இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
என உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 5692.
*🌳காளான்*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சமையல் காளான் 'மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
🌿ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஹகம் இப்னு உ(த்)தைபா(ரஹ்) எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தபோது தான் அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு வந்தேன்.
ஸஹீஹ் புகாரி 5708.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *14-03-2017*

No comments:
Post a Comment