Sunday, 26 March 2017

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்


பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்



اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اَللّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல்கஸலி வல்ஜுபுனி வல்புக்லி வல்ஹரமி வஅதாபில் கப்ரி. அல்லாஹும்ம ஆ(த்)தி நஃப்ஸீ தக்வாஹா வஸக்கிஹா அன்(த்)த கைரு மன் ஸக்காஹா அன்(த்)த வலிய்யுஹா வமவ் லாஹா, அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் இல்மின் லாயன்ஃபவு வமின் கல்பின் லாயக்ஷவு வமின் நஃப்ஸின் லா தஷ்பவு வமின் தஃவ(த்)தின் லா யுஸ்(த்)தஜாபு லஹா

பொருள் : இறைவா! பலவீனம், சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, மண்ணறையின் வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! எனது உள்ளத்துக்கு இறையச்சத்தை வழங்கி விடு! அதைத் தூய்மைப்படுத்து! தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீ தான் அதன் பொறுப்பாளன். அதன் எஜமானன். இறைவா! பயனற்ற கல்வியை விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தை விட்டும், நிறைவடையாத ஆத்மாவை விட்டும், அங்கீகரிக்கப்படாத துஆவை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம்.

பதிவு நாள்: 27-03-2017

No comments:

Post a Comment