Thursday, 23 March 2017

அழகிய உவமை


                       அழகிய உவமை
                    ***********************
61- حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، فَحَدِّثُونِي مَا هِيَ)). فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللَّهِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، فَاسْتَحْيَيْتُ ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ: ((هِيَ النَّخْلَةُ)).

61. “மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?“ என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் “இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்“ என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “பேரீச்சை மரம்“ என்றார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி


படிப்பினை
**************

1) பேரித்தமரத்தின் ஒரு இலையை பிடித்து இலுத்தால் மற்ற இலையில் உள்ள முற்கள் கையை குத்தும் பறிக்க விடாது.

இதுபோல் ஒரு முஃமினுக்கு ஒரு கஷ்டம் என்றால் மற்ற முஃமின்கள் உதவி புரிவார்கள்.


2) பேரித்தமரத்தின் ஒரு கிளையை மொத்தமாக வெட்டி எடுக்கமுடியுமே தவிர  ஒரு இலையை மட்டும் தனியாக பிரிக்க முடியாது .

இதேபோல் முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்ற படிப்பினையை இந்த மரம் தறுகின்றது.

பதிவு நாள்: 24-03-2017

No comments:

Post a Comment