Monday, 20 March 2017

*🌒வரலாற்றில் ஒரு நாள்....!!🌒*


*🌒வரலாற்றில் ஒரு நாள்....!!🌒*



📃இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலியல்லாஹூ  அன்ஹூ”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது....!

🗂கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.....!!

🍃குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது.!

🌳அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...

🌵அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்...

🗺"யாராவது ஒருவர் இவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டால், நான் இவர் போய் வர சம்மதிக்கிறேன்" என்றார்...

👁உடனே, அபுதர் (ரலியல்லாஹூ) அவர்கள், “அவருக்கு தான் பொறுப்பு” ஏற்பதாக சொல்கிறார்கள்.

🐠அப்போது உமர் ரலியல்லாஹூ , "அவர் ஏமாற்றி சென்றால் நீங்கள் தண்டனையை ஏற்க வேண்டும். நன்கு யோசித்து சொல்லுங்கள்" என அபு தரிடம் (ரலியல்லாஹூ ) சொல்கிறார்...

🦋அபுதரும் (ரலியல்லாஹூ அன்ஹூ)  தான் ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார்கள்...! !

🐛தண்டனைக்குரிய நபருக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது...!

🐧மூன்றாவது நாள் அசர் (மாலை) தொழுகைக்கு முன் வந்து விடவேண்டும் என்ற நிபந்தனையோடு விடப்படுகிறார்...

🥗இரண்டு நாட்கள் ஓடியது.

🍇மூன்றாவது நாள் வந்தது. அசர் (மாலை) தொழுகை நடைபெற்றது...!

🍞எல்லோரும் தண்டனையை நிறைவேற்ற ஆயத்தமாகிய நிலையில் குறிப்பிட்ட நபருக்காக காத்திருக்கின்றனர்...

🥝நேரம் செல்ல செல்ல மக்கள் மத்தியில் சலசலப்பு...

🐎தூரத்தில் ஒரு குதிரை மிகவும் வேகமாக வருகிறது...

🏀தண்டனைக்குரிய நபர் வந்துவிட்டார்.....

🏞உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவரிடம் "நீர் ஏன் திரும்ப வந்தீர்..?? என கேட்கிறார்கள்.

⚓அதற்கு அவர் " முஹம்மது  நபியின் (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்) வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், தண்டனைக்கு அஞ்சி தலைமறைவு ஆகிவிட்டார்,,,,

🚧என்று நாளை வரலாறு என்னை பழிக்கும். மேலும், இங்கே தப்பிவிடலாம். நாளை அல்லாஹ்விடம் இதை விட கொடிய வேதனை கிடைக்கும் என நான் அஞ்சினேன்" என்றார்...!!

🌁அடுத்து அபு தரிடம் (ரலியல்லாஹூ  அன்ஹூ) "நீங்கள் என்ன தைரியத்தில் அவருக்கு பொறுப்பு ஏற்றீர்கள்..??" என்று கேட்டார்கள் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ..!

🎢உடனே அபூதர் ரலியல்லாஹூ  "முஹம்மது நபியின் வழி நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவருக்கு பொறுப்பேற்க யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடுமோ,

🗜என அஞ்சினேன். அதனால் தான் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பேற்றேன்" என்றார்கள்...

⏱பின்னர் உமர் ரலியல்லாஹூ  அன்ஹூ  சரி தண்டனையை நிறைவேற்றலாம் என்றதும்...

🎛குற்றம் சாட்டியவர், "நான் அவரை மன்னித்துவிடுகிறேன் அவரை விட்டுவிடுங்கள்" என்றார்...!!

⌛ஏனென்று,,, கேட்டதற்கு "முஹம்மது நபியின் (ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்)நடக்கும் முஸ்லிம் தோழர் ஒருவர், மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவராக இருந்தார் என்ற பழி என் மீது வருவதை நான் விரும்பவில்லை" என்றார்...

🎚"இத்தகைய நல்ல மனிதர்களுக்கு என்னை ஜனாதிபதியாக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும்",,,,

😭என கண்ணீர் மல்க கூறினார்கள் உமர் ரலியல்லாஹூ  அன்ஹூ- நம்பிக்கையாளர்களின் தலைவர்..!!
(ஸஹாபாக்களின் சரிதம்)

😇ஸல்லல்லாஹூ  அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம்.

பதிவு நாள்: *20-03-2017*

No comments:

Post a Comment