Wednesday, 8 March 2017

நிக்காஹ் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார் தொடர் - 4


*📖அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார்? தொடர் -4*



🐤ஒரு காபிரின் மனைவி முஸ்லிமானால் அவளின் இத்தா காலம் வரை திருமணம் முடிக்க இயலாது .

✅முஃமீனான பெண்களை திருமணம் செய்து  இணைத்து கொள்ளுதல் : இந்த விடயம் மக்கா காபிர்களின் விடயத்தில் அல்லாஹ்வின் கட்டளை ஆகும், மக்காவிலிருந்து ஹிஜ்ரத் வந்த முஹ்மீனான பெண்களை திருப்பி காபிர்களிடம் அனுப்பாதீர்கள் அவர்கள் காபிர்களை மனப்பது ஆகுமானதல்ல. எனவே அவர்களை திருமணம் முடித்து ஏற்று கொள்ளவேண்டும் என இறைவன் கூறுகிறான்.

📜”ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;. அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; (சூரத்துல் மும்தஹினா : 10 )

🌴4) மூன்று தலாக் சொன்ன பெண்ணை கணவன் மறுபடியும் மணக்கலாகாது , வேறு ஒருவர் திருமணம் முடித்து தலாக் சொன்னாலே தவிர :“மீட்ட முடியாதபடி – (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால்  கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து – அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் – மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு  மணவாழ்வில்)  மீள்வது குற்றமல்ல. (சூரத்துல் அல்பகரா :230)

🌵5) இணைவைக்கும் பெண் முஸ்லிம் ஆகும் வரை திருமணம் செய்யக்கூடாது .

📄இறைவன் இது பற்றி கூறுகிறான் . (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை–அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை– நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;  (சூரத்துல் பகரா 221).

📚மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; (சூரத்துல் மும்தஹினா 10 )

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *09-03-2017*

No comments:

Post a Comment