🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 416*
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *எத்தகைய இந்திரியத் சத்திலிருந்து அல்லாஹ் மனிதனை உண்டாக்குவதாக கூறுகிறான்❓*
💠 *பதில் =*
_நழுவும் அற்பத் துளியாகிய இந்திரிய சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்._
*ஆதாரம் = *அல்குர்ஆன்: 32:08*
📃பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
(அல்குர்ஆன் : 32:8)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *தொழுகைக்கான அறிவிப்பு செய்ய ஆரம்பித்தவுடன் ஷைத்தான் எவ்வாறு ஓடுவதாக பெருமானார் கூறினார்கள்❓*
💠 *பதில் =*
_தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்._
*ஆதாரம் = * புகாரி:608,1222,1231,3285*
*முஸ்லிம்:634,635,636,985,986*
📃608. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, 'இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📜986. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போது ஷைத்தான் வாயு வெளியேறியவனாக ஓடுகிறான்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றிருப்பதுடன் "மேலும், அவன் திரும்பிவந்து தொழுகையில் ஈடுபட்டுள்ள மனிதருக்குப் பல்வேறு எண்ணங்களையும் ஆசைகளையும் ஊட்டுகிறான். அவர் இதுவரை நினைத்துப்பார்த்திராத பல அலுவல்களை அவருக்கு அவன் நினைவுபடுத்துகிறான்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. ஹக்கிம் - தென்காசி 2
4. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
2. அப்துல் பாசித் - சவுதி 2
3. சுல்தான் - திருநெல்வேலி 2
4. ஹுசைன் - நாகர்கோவில் 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
8. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 30 - 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment