Sunday, 19 March 2017

🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 410


🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 410

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *மழை எவ்வாறு வெளிப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான் ❓

💠 *பதில் =*
_காற்று-மேகம்-இவற்றைக் கொண்டு_

*ஆதாரம் =*
📗 அல்குர்ஆன்: 30:48

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *நபித்துவத்தில் எதைத் தவிர  வேறு எதுவும் எஞ்சி இருக்கவில்லை என பெருமானார் கூறுகிறார்கள்❓*

💠 *பதில் =*
_(முபஷ்ஷிராத்)நல்ல உண்மையான கனவு._

*ஆதாரம் =புகாரி: 6990*
*முஸ்லிம்: 824,825*

📜6990. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு' என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.

824. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கி (பள்ளிவாசலுக்குள் நோக்கி)னார்கள். அப்போது மக்கள், அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களே! நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு முஸ்லிம் காண்கின்ற அலலது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அறிந்து கொள்ளுங்கள்: ருகூஉ அல்லது சஜ்தாச் செய்துகொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📖825. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கினார்கள். அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் காரணத்தால் அவர்களது தலையில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அப்போது அவர்கள், இறைவா! (உன் செய்திகளை) நான் (மக்களிடம்) சேர்த்துவிட்டேனா? என்று மும்முறை கூறிவிட்டு, நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு நல்ல அடியார் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற (நல்ல) கனவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று சொன்னார்கள்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
2. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
3. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
8. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
2. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
3. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
4. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
5. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
6. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
7. ஹுசைன் - நாகர்கோவில் 2
8. அப்துல் பாசித் - சவுதி 2
9. சுல்தான் - திருநெல்வேலி 2
10. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 2

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 19-03-2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment